மலாய் மொழி பேசும் சில நாடுகளில் அரச தலைவருக்கான பதவிப் பெயர் From Wikipedia, the free encyclopedia
யாங் டி பெர்துவான் நெகாரா (ஆங்கிலம்: Yang di-Pertuan Negara; மலாய்: Yang di-Pertuan Negara) என்பது தென்கிழக்கு ஆசியாவில் மலாய் மொழி பேசும் சில நாடுகளில் அரச தலைவருக்கான பதவிப் பெயர் ஆகும்.
இந்தப் பதவிப் பெயர் புரூணை, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு காலங்களில் அதிகாரப்பூர்வ பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது.
சபா மாநிலத் தலைவர், ஒரு காலத்தில் யாங் டி பெர்துவான் நெகாரா (Yang Di-Pertua Negara) என்று அழைக்கப்பட்டார். தற்சமயம் யாங் டி பெர்துவா நெகாரா (Yang Di-Pertua Negeri) என்று அழைக்கப் படுகிறார்.[1]
1959-ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதிநிதியாக ஒரு காலனித்துவ ஆளுநர் (Governor of Singapore), சிங்கப்பூரில் பொறுப்பு வகித்தார். சிங்கப்பூருக்குச் சுயாட்சியை வழங்கிய அரசியலமைப்பின் திருத்தங்களைத் தொடர்ந்து, காலனித்துவ ஆளுநர் எனும் பதவி யாங் டி பெர்துவான் நெகாரா என்று மாற்றம் காணப்பட்டது.
யாங் டி பெர்துவான் நெகாரா எனும் பதவி ஓர் அரசுத் தலைவர் என்று நேரடியாக அர்த்தம் கொண்டு இருந்த போதிலும், அரசியலமைப்பு ரீதியில், சட்டப்படியாக ஒரு தலைமை நிர்வாகி போல செயல்பட வேண்டிய நிலையில் இருந்தது.[2]
ஓர் இடைக்கால ஏற்பாட்டின் கீழ், சிங்கப்பூரின் கடைசி காலனித்துவ ஆளுநர் சர் வில்லியம் கூடே (Sir William Goode) என்பவர்; 1959 ஜூன் 3-ஆம் தேதி முதல் 1959 டிசம்பர் 3-ஆம் தேதி வரையில் சிங்கப்பூரின் முதல் யாங் டி பெர்துவான் நெகாராவாகப் பணியாற்றினார்.
அதன் பின்னர் அந்தப் பொறுப்பை யூசுப் இசாக் (Yusof bin Ishak) ஏற்றுக் கொண்டார். இவர் பதவி ஏற்ற அதே 1959 டிசம்பர் 3-ஆம் தேதிதான் சிங்கப்பூருக்கான புதிய தேசியக் கொடி; மரபுச் சின்னம் (coat of arms); நாட்டுப் பண் ஆகியவை பெறப்பட்டன.[3]
1963-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசு, மலேசியாவின் 14-ஆவது மாநிலமாக இணைக்கப்பட்ட பின்னரும் யாங் டி பெர்துவான் நெகாரா பதவி தக்க வைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூரின் யாங் டி பெர்துவான் நெகாரா; மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் கீழ் செயல்பட்டு வந்தார்.[2]
1965 ஆகஸ்டு 9-ஆம் தேதி, மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டது. பின்னர், காமன்வெல்த் நாடுகளின் (Commonwealth of Nations) உறுப்பினர் நாடுகளில் சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடானது.
சிங்கப்பூரின் சட்ட அமைப்பு திருத்தம் செய்யப்பட்டது. சிங்கப்பூர் ஒரு குடியரசு. நாடானது (Republic of Singapore Independence Act). அத்துடன் யாங் டி பெர்துவான் நெகாரா பதவி மற்றம் செய்யப்பட்டது. அதிபர் எனும் பதவி உருவாக்கப் பட்டது.[4]
புரூணை நாட்டில், அதன் மன்னர் (Sultan of Brunei), யாங் டி பெர்துவான் நெகாரா புரூணை டாருல் சலாம் (Yang Di-Pertuan Negara Brunei Darussalam) என்றும் அழைக்கப் படுகிறார்.
ஆனாலும், புரூணை நாட்டு மரபுகளின்படி, புரூணை நாட்டின் சுல்தான் அவர்கள்; கெபாவா டூலி யாங் மகா மூலியா (KDYMM) பதுகா செரி பகிந்தா சுல்தான் (Kebawah Duli Yang Maha Mulia (KDYMM) Paduka Seri Baginda Sultan) என்றே அழைக்கப் படுகிறார். அரசாங்கத் தலைவர் யாங் டி பெர்துவான் நெகாரா புரூணை டாருல் சலாம் (Yang Di-Pertuan Negara Brunei Darussalam) அழைக்கப் படுகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.