From Wikipedia, the free encyclopedia
14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[2] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.[3]
| |||||||||||||||||||||||||||||||
மலேசிய நாடாளுமன்றத்துக்கான அனைத்து 222 இடங்களுக்கும் அதிகபட்சமாக 112 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 14,940,624 | ||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 76%[1] | ||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.[4][5]
மலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான மகாதீர் பின் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[6]
அனைத்து 222 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் (12 சட்டமன்றங்களின் 505 இருக்கைகளுக்கும்) தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் மே 9 மாலை 5 மணிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டன.
124 | 79 | 18 | 1 |
PH + WARISAN | BN | GS | USA |
---|
}}
மாநிலம் / நடுவண் பிராந்தியம் |
தேசிய முன்னணி | பாக்காத்தான் ஹரப்பான் | ககசான் செஜாத்திரா | ஏனையோர் / சுயேச்சை | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இருக்கைகள் | % | ± | வாக்குகள் | % | இருக்கைகள் | % | ± | வாக்குகள் | % | இருக்கைகள் | % | ± | வாக்குகள் | % | இருக்கைகள் | % | ± | |
ஜொகூர் | 0 | 0 | 19 | 33.9 | 18 | 0 | 0 | 36 | 64.3 | 20 | 0 | 0 | 1 | 1.8 | 2 | 0 | 0 | 0 | 0 | |
கடாரம் | 0 | 0 | 3 | 8.3 | 17 | 0 | 0 | 18 | 50 | 9 | 0 | 0 | 15 | 41.7 | 8 | 0 | 0 | 0 | 0 | |
கிளாந்தான் | 0 | 0 | 8 | 17.8 | 3 | 0 | 0 | 0 | 0 | 2 | 0 | 0 | 37 | 82.2 | 6 | 0 | 0 | 0 | 0 | |
மலாக்கா | 0 | 0 | 13 | 46.4 | 8 | 0 | 0 | 15 | 53.6 | 12 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 0 | 0 | 0 | |
நெகிரி செம்பிலான் | 0 | 0 | 16 | 44.4 | 5 | 0 | 0 | 20 | 55.6 | 6 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | ||
பகாங் | 0 | 0 | 25 | 59.5 | 4 | 0 | 0 | 9 | 21.4 | 1 | 0 | 0 | 8 | 19.0 | 6 | 0 | 0 | 0 | 0 | |
பினாங்கு | 0 | 0 | 2 | 5.0 | 8 | 0 | 0 | 37 | 92.5 | 8 | 0 | 0 | 1 | 2.5 | 0 | 0 | 0 | 0 | ||
பேராக் | 0 | 0 | 27 | 45.0 | 4 | 0 | 0 | 29 | 48.3 | 5 | 0 | 0 | 3 | 5.1 | 1 | 0 | 0 | 0 | 0 | |
பெர்லிஸ் | 52,224 | 44.1 | 10 | 66.7 | 3 | 34,854 | 29.4 | 3 | 20.0 | 2 | 29,162 | 24.6 | 2 | 13.3 | 1 | 0 | 0 | 0 | 0 | |
சபா | 0 | 0 | 29 | 48.33 | 16 | 0 | 0 | 29 | 48.33 | 5 | 0 | 0 | 0 | 0.00 | 46,868 | 0.00 | 2 | 3.34 | 1 | |
சிலாங்கூர் | 0 | 0 | 4 | 7.1 | 7 | 0 | 0 | 51 | 91.1 | 22 | 0 | 0 | 1 | 1.8 | 12 | 0 | 0 | 0 | 0 | |
திராங்கானு | 0 | 0 | 10 | 31.3 | 7 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 0 | 22 | 67.8 | 8 | 0 | 0 | 0 | 0 | |
மொத்தம் | 0 | 0 | 168 | 32.9 | 0 | 0 | 247 | 48.9 | 0 | 0 | 90 | 17.8 | 0 | 0 | 2 | 0.4 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.