மலேசியப் பொதுத் தேர்தல், 1995
மலேசியாவின் 9-ஆவது பொது தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 1995 (1995 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1995;) என்பது 1995 ஏப்ரல் 24 - 25-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 9-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவில் உள்ள 192 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
விரைவான உண்மைகள் மலேசிய மக்களவையின் 192 இடங்கள் அதிகபட்சமாக 97 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்த வாக்காளர்கள் ...
| |||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 192 இடங்கள் அதிகபட்சமாக 97 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 9,012,370 | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 394 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இதன் விளைவாக அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 192 இடங்களில் 162 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு 68.3%.[1][1]