மலேசியாவின் 9-ஆவது பொது தேர்தல் From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 1995 (1995 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1995;) என்பது 1995 ஏப்ரல் 24 - 25-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 9-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவில் உள்ள 192 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
| |||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 192 இடங்கள் அதிகபட்சமாக 97 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 9,012,370 | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
|
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 394 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இதன் விளைவாக அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 192 இடங்களில் 162 இடங்களை வென்றது. வாக்குப்பதிவு 68.3%.[1][1]
மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநிலப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.[2]
தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரைப் பிரதமர் அல்லது பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக்கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[3]
மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.
ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கட்சி அல்லது கூட்டணி | வாக்குகள் | % | Seats | +/– | |||
---|---|---|---|---|---|---|---|
பாரிசான் நேசனல் | அம்னோ | 38,81,214 | 65.16 | 89 | +18 | ||
மலேசிய சீனர் சங்கம் | 30 | +12 | |||||
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி | 10 | 0 | |||||
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி | 7 | +3 | |||||
மலேசிய இந்திய காங்கிரசு | 7 | +1 | |||||
கெராக்கான் | 7 | +2 | |||||
சரவாக் டயாக் இனக்கட்சி | 5 | +1 | |||||
சரவாக் தேசியக் கட்சி | 3 | 0 | |||||
சபா முற்போக்கு கட்சி | 2 | புதிது | |||||
ஜனநாயக விடுதலைக் கட்சி | 1 | புதிது | |||||
சபா விடுதலை கட்சி | 0 | புதிது | |||||
மக்கள் முற்போக்கு கட்சி | 0 | 0 | |||||
மக்கள் நீதி முன்னணி | 0 | 0 | |||||
ஐக்கிய சபா மக்கள் கட்சி | 0 | புதிது | |||||
சுயேச்சை | 1 | புதிது | |||||
மொத்தம் | 162 | +35 | |||||
அங்காத்தான் பெர்பாடுவான் | செமாங்காட் 46 | 6,16,589 | 10.35 | 6 | –2 | ||
மலேசிய இசுலாமிய கட்சி | 4,30,098 | 7.22 | 7 | 0 | |||
மொத்தம் | 10,46,687 | 17.57 | 13 | –2 | |||
காகாசான் ராக்யாட் | ஜனநாயக செயல் கட்சி | 7,12,175 | 11.96 | 9 | –11 | ||
ஐக்கிய சபா கட்சி | 1,98,594 | 3.33 | 8 | –6 | |||
மொத்தம் | 9,10,769 | 15.29 | 17 | –17 | |||
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி | 4,957 | 0.08 | 0 | புதிது | |||
மலேசிய மக்கள் கட்சி | 1,13,068 | 1.90 | 0 | 0 | |||
சுயேச்சைகள் | 0 | –4 | |||||
மொத்தம் | 59,56,695 | 100.00 | 192 | +12 | |||
செல்லுபடியான வாக்குகள் | 59,56,695 | 96.81 | |||||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,96,114 | 3.19 | |||||
மொத்த வாக்குகள் | 61,52,809 | 100.00 | |||||
பதிவான வாக்குகள் | 90,12,370 | 68.27 | |||||
மூலம்: Nohlen et al., IPU |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.