மரியா சரப்போவா
From Wikipedia, the free encyclopedia
மரியா சரபோவா (உருசியம்: Мария Юрьевна Шарапова [mɐˈrʲijə ˈjurʲjɪvnə ʂɐˈrapəvə]( கேட்க)(Maria Sharapova, பி. ஏப்ரல் 19, 1987) ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு (குடியுரிமை பெறுவதற்கு முந்தைய நிலை) பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார் [3]. இவர் வரிப்பந்தாட்டத்தில் இதுவரை 29 பட்டங்கள் வென்றுள்ளார், அதில் 5 கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றிப் பட்டங்களும் அடங்கும். இவர் 5 வெவ்வேறு காலகட்டங்களில் முதல்நிலை வீராங்கனையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். ஆகத்து 22, 2005 அன்று முதன் முதல் தரவரிசையில் உலகின் முதல் இடத்தை பிடித்தார், ஐந்தாம் முறையாக சூன் 11, 2012 அன்று தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் [4]. இதுவரை ஒன்பது கிராண்ட்சிலாம் எனப்படும் பெருவெற்றி தொடர்களின் இறுதி ஆட்டத்தில் பங்கெடுத்து ஐந்தில் வென்றுள்ளார். 17 வயதாக இருக்கும் போது தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற (2002, 2003) செரீனா வில்லியம்சை தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை 2004ல் வென்றது இவரின் தொழில் முறை ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையாகும்.
நாடு | உருசியா |
---|---|
வாழ்விடம் | பிராடெண்டன், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
உயரம் | 1.88 மீட்டர்கள் (6 அடி 2 அங்) |
தொழில் ஆரம்பம் | ஏப்ரல் 19, 2001 |
விளையாட்டுகள் | வலது கை (இரு கை பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $ 32,730,228[1] |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 562–135 (80.72%) |
பட்டங்கள் | 34 டபிள்யூடிஏ, 4 ஐடிஃப் |
அதிகூடிய தரவரிசை |
|
தற்போதைய தரவரிசை |
|
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வெ (2008) |
பிரெஞ்சு ஓப்பன் | வெ (2012) (2014) |
விம்பிள்டன் | வெ (2004) |
அமெரிக்க ஓப்பன் | வெ (2006) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | வெ (2004) |
ஒலிம்பிக் போட்டிகள் | வெள்ளி பதக்கம் (2012) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 23–17 |
பட்டங்கள் | 3 டபிள்யூடிஏ |
அதியுயர் தரவரிசை | 41 (ஜூன் 14, 2004) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 2 சு (2003, 2004 ) |
அமெரிக்க ஓப்பன் | 2 சு (2003) |
இற்றைப்படுத்தப்பட்டது: ஜனவரி 12, 2015. |