மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)
தொல்லியல் தளம் / From Wikipedia, the free encyclopedia
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (Pre-Pottery Neolithic B (PPNB) இது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் ஒரு பகுதியாகும். இக்காலத்திய பண்பாடு வளமான பிறை பிரதேசத்தின் மேல் மெசொப்பொத்தேமியாவில் கிமு 8,800 முதல் கிமு 6,500 வரை விளங்கியது.[1] துருக்கியின் பெருவயிறு மலை மற்றும் எரிக்கோ நகரத்தின் தொல்லியல் களங்களிலிருந்து இக்கற்காலத்திய பண்பாடு அறிய முடிகிறது.
விரைவான உண்மைகள் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), புவியியல் பகுதி ...
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) | |
---|---|
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திய வளமான பிறை பிரதேசத்தின் தொல்லியல் களங்கள், கிமு 7,500-இல் மெசொப்பொத்தேமியாவில் குடியிருப்புகள் தோன்றாத காலம் | |
புவியியல் பகுதி | வளமான பிறை பிரதேசம் |
காலப்பகுதி | மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் |
காலம் | பொது ஆண்டு 10,800 – 8,500 கிமு 8,800 – கிமு 6,500 [1] |
வகை களம் | எரிக்கோ, பைப்லோஸ் |
முந்தியது | மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) |
பிந்தியது | மட்பாண்ட புதிய கற்காலம், ஹலாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு, புதிய கற்கால கிரேக்கம் |
மூடு
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) போன்று, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ), இடைக் கற்காலத்திய நூத்துபியன் பண்பாட்டிலிருந்து வளர்ச்சியுற்றது. இக்கற்காலம் அனதோலியாவின் வடகிழக்கில் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளது.