From Wikipedia, the free encyclopedia
அரகோனைட்டு என்பது கால்சியம் கார்போனேட்டு (calcium carbonate), CaCO3 என்னும் வேதிப்பொருளின் பல்லுருக்களில் பொதுவாகக் காணப்படும் இரண்டு வகைகளில் ஒன்றாகும். மற்ற பொதுவான வடிவம் கால்சைட்டு (calcite) என்னும் கனிமம். அரகோனைட்டின் படிக வடிவம் கால்சைட்டின் படிக வடிவத்தில் இருந்து வேறுபட்டது. அரகோனைட்டு பருமச்செவ்வக வடிவில் இருக்கும். 470 °C வெப்பநிலையில் அரகோனைட்டானது கால்சைட்டாக மாறும். அரகோனைட்டு குச்சிகுச்சியான வடிவிலோ நார்போன்ற வடிவிலோ இருக்கலாம். அல்லது ""இரும்புப்பூ" (flos-ferri) என்று அழைக்கப்படும் கிளைக்கும் ஸ்ட்டால்க்டைட் (stalactite) என்னும் வடிவிலும் காணப்படுகின்றது. கார்த்தினியத்தில் உள்ள இரும்புச் சுரங்கங்களில் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. எசுப்பானியத்தில் (ஸ்பெயினில்) குவாடலாஃகரா (Guadalajara) மாநிலத்தில் உள்ள மொலினா டி அரகோன் (Molina de Aragón ) என்னும் இடத்தில் இருந்து கிடைப்பதால், அரகோனைட்டு என்று பெயர் பெற்றது. சுலோவாக்கியா நாட்டில் ஓச்டின்சக்கா அரகோனைட்டு குகை (Ochtinská Aragonite Cave) உள்ளது. பகாமா நாட்டில் கடலடியில் ஓலைட் அரகோனைட்டு படிவுகள் நிறைய உள்ளன.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
அரகோனைட்டு | |
---|---|
Aragonite from Salsignes Mine, Aude department, France Size: 30x30x20 cm | |
பொதுவானாவை | |
வகை | Carbonate mineral |
வேதி வாய்பாடு | CaCO3 |
இனங்காணல் | |
நிறம் | White, red, yellow, orange, green, purple, grey, blue and brown |
படிக இயல்பு | Pseudohexagonal, prismatic crystals, acicular, columnar, globular, reniform, pisolitic, coralloidal, stalactitic, internally banded |
படிக அமைப்பு | Orthorhombic |
இரட்டைப் படிகமுறல் | Polysynthetic parallel to {100} cyclically on {110} |
பிளப்பு | Distinct on {010}, imperfect {110} and {011} |
முறிவு | Subconchoidal |
விகுவுத் தன்மை | Brittle |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5-4 |
மிளிர்வு | Vitreous, resinous on fracture surfaces |
கீற்றுவண்ணம் | White |
ஒளிஊடுருவும் தன்மை | Translucent to transparent |
ஒப்படர்த்தி | 2.95 |
ஒளியியல் பண்புகள் | Biaxial (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.529 – 1.530 nβ = 1.680 – 1.682 nγ = 1.685 – 1.686 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.156 |
2V கோணம் | 18° |
கரைதிறன் | Dilute acid |
பிற சிறப்பியல்புகள் | Fluorescence: pale rose, yellow, white or bluish; phosphorescence: greenish or white (LW UV); yellowish (SW UV) |
மேற்கோள்கள் | [1][2][3] |
அரகோனைட்டு இயல்பாக கிளிஞ்சல் உயிரிகள் (மெல்லுடலிகள்), முத்துச்சிப்பி போன்ற வற்றில் புறக்கூட்டில் உருவாகின்றன. இவை உயிர்வேதியல் வினைகளால் உருவாகுவதால் இதன் வடிவங்கள் உயிர்கரிமமல்லாத வேதியியல் அரகோனைட்டு வடிவில் இருந்து மாறுபட்டன. சில மெல்லுடலிகளில் முழு சிப்பியுமே அரகோனைட்டாக இருக்கும், சிலவற்றில் அரகோனைட்டு, கால்சைட்டாகிய இரண்டு கனிமங்களும் இருக்கும்.
அரகோனைட்டு வெப்பவியக்கவியலின் படி சீர்தரமான வெப்ப அழுத்தநிலைகளில் நிலைபெறாத வேதிப்பொருள் வடிவம். இது பத்து முதல் நூறு மில்லியன் ஆண்டுகள் கணக்களவில் (107 to 108 ) கால்சைட்டாக மாறும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.