மகெர்சலா அலி
From Wikipedia, the free encyclopedia
மகெர்சலா அலி (ஆங்கிலம்:Mahershala Ali; /məˈhɜːrʃələ/; பிறப்பு மகெர்சலால்யசுபசு கில்மோர், பிப்ரவரி 16, 1974) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். தனது நடிப்பிற்காக பல விருதுக்ளை வென்றுள்ளார்- அதில் இரண்டு அகாதமி விருதுகள், ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் ஒரு பிரதானநேர எம்மி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டைம் இதழ் இவரை உலகின் 100 செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவராக 2019 இல் அறிவித்தது.[2] மேலும் 2020 இல் த நியூயார்க் டைம்ஸ் இவரை 21-ஆம் நூற்றாண்டின் 25 மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறிவித்தது.[3]
மகெர்சலா அலி Mahershala Ali | |
---|---|
2019 சான் டியேகோ காமிக்-கான் இல் மகெர்சலா அலி | |
பிறப்பு | மகெர்சலால்யசுபசு கில்மோர் பெப்ரவரி 16, 1974 (1974-02-16) (அகவை 50) ஓக்லண்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா[1] |
மற்ற பெயர்கள் | மகெர்சலா கரிம்-அலி, கெர்சல் கில்மோர் |
கல்வி | தூய மேரி கல்லூரி, கலிபோர்னியா (இளங்கலை) நியூ யார்க் பல்கலைக்கழகம் (முதுகலை) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | அமாடசு சமி-கரிம் (தி. 2013) |
பிள்ளைகள் | 1 |
தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (2008), மூன்லைட்டு (2016), கிறீன் புக் (2018) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார். அகாதமி விருதினை வென்ற முதல் இசுலாமியர் இவரே.[4][5] மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் (MCU) நடித்துள்ளார் - நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர் லூக் கேஜ் (2016).