புளூட்டோ
வெற்று கிரகம் / From Wikipedia, the free encyclopedia
புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: [15] மற்றும் [16]) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது.[lower-alpha 8] புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன.
புளூட்டோவின் வடக்கு அரைக்கோளம் (நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் 2015 எடுத்த படம்) |
|||||||
கண்டுபிடிப்பு
| |||||||
---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | கிளைட் டோம்பா | ||||||
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | லோவெல் வான்காணகம் | ||||||
கண்டுபிடிப்பு நாள் | பெப்ரவரி 18, 1930 | ||||||
பெயர்க்குறிப்பினை
| |||||||
பெயரிடக் காரணம் | புளூட்டோ | ||||||
சிறு கோள் பகுப்பு |
|
||||||
காலகட்டம்J2000 | |||||||
சூரிய சேய்மை நிலை |
|
||||||
சூரிய அண்மை நிலை | |||||||
அரைப்பேரச்சு |
|
||||||
மையத்தொலைத்தகவு | 0.2488 | ||||||
சுற்றுப்பாதை வேகம் | |||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 366.73 நாட்கள்[2] | ||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 4.743 கிமீ/செ[2] | ||||||
சராசரி பிறழ்வு | 14.53 ° | ||||||
சாய்வு |
|
||||||
Longitude of ascending node | 110.299° | ||||||
Argument of perihelion | 113.834° | ||||||
துணைக்கோள்கள் | 5 | ||||||
சிறப்பியல்பு
| |||||||
பரிமாணங்கள் | 2,376.6±1.6 கிமீ [lower-alpha 2] | ||||||
சராசரி ஆரம் | |||||||
தட்டையாதல் | <1%[6] | ||||||
புறப் பரப்பு |
|
||||||
கனஅளவு |
|
||||||
நிறை | |||||||
அடர்த்தி | 1.854±0.006 கி/செமீ3[5][6] | ||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் |
|
||||||
விடுபடு திசைவேகம் | 1.212 கிமீ/செ[lower-alpha 6] | ||||||
சுழற்சிக் காலம் |
|
||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் |
|
||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 47.18 கிமீ/ம | ||||||
அச்சுவழிச் சாய்வு | 122.53° (to orbit)[2] | ||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 132.993°[8] | ||||||
வடதுருவ இறக்கம் | −6.163°[8] | ||||||
எதிரொளி திறன் | 0.49 முதல் 0.66 (வடிவியல், 35% மாறுபடுகிறது)[2][9] | ||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் |
| ||||||
தோற்ற ஒளிர்மை | 13.65[2] முதல் 16.3[10] (சராசரி 15.1)[2] |
||||||
விண்மீன் ஒளிர்மை | −0.7[11] | ||||||
கோணவிட்டம் | 0.06″ முதல் 0.11″[2][lower-alpha 7] | ||||||
பெயரெச்சங்கள் | புளூட்டோனியன் /pluːˈtoʊniən/[12] | ||||||
வளிமண்டலம்
| |||||||
பரப்பு அழுத்தம் | 1.0 Pa (2015)[6][13] | ||||||
வளிமண்டல இயைபு | நைட்ரசன், மீத்தேன், கார்பனோராக்சைடு[14] |
கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது[17]