![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/%25E0%25A4%25AA%25E0%25A5%258D%25E0%25A4%25B0%25E0%25A4%25B8%25E0%25A4%25AA%25E0%25A4%25BE_%25E0%25A4%25B2%25E0%25A5%258B%25E0%25A4%25B9%25E0%25A4%25BF%25E0%25A4%25AF%25E0%25A4%25BE_%25E0%25A4%25A7%25E0%25A5%258D%25E0%25A4%25B5%25E0%25A4%259C.jpg/640px-%25E0%25A4%25AA%25E0%25A5%258D%25E0%25A4%25B0%25E0%25A4%25B8%25E0%25A4%25AA%25E0%25A4%25BE_%25E0%25A4%25B2%25E0%25A5%258B%25E0%25A4%25B9%25E0%25A4%25BF%25E0%25A4%25AF%25E0%25A4%25BE_%25E0%25A4%25A7%25E0%25A5%258D%25E0%25A4%25B5%25E0%25A4%259C.jpg&w=640&q=50)
பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)
From Wikipedia, the free encyclopedia
பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) (Pragatisheel Samajwadi Party (Lohiya))(மொழிபெயர்ப்பு : முற்போக்கு சோசலிச கட்சி (லோஹியா)), என்பது முன்னர் சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி என உத்தரப் பிரதேசம் முன்னாள் அமைச்சர் சிவபால் சிங் யாதவ் தோற்றுவித்த கட்சி ஆகும். இவர் சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆகஸ்ட் 29, 2018 அன்று விலகி இக்கட்சியினைத் தோற்றுவித்தார்.[1] சோசலிச விழுமியங்களைத் தக்கவைக்க பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சியை (லோஹியா) உருவாக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.[2] உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான இலக்னோவில் முகாம் அலுவலகம் உள்ளது. கட்சியின் நிரந்தர அலுவலகம் லக்னோவின் கோமதி நகரில் அமைந்துள்ளது.[3][4]
விரைவான உண்மைகள் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா), சுருக்கக்குறி ...
பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PSP(L) |
தலைவர் | சிவபால் சிங் யாதவ் |
நிறுவனர் | சிவபால் சிங் யாதவ் |
தொடக்கம் | 29 ஆகத்து 2018 (5 ஆண்டுகள் முன்னர்) (2018-08-29) |
முன்னர் | சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி |
தலைமையகம் | இலக்னோ, உத்தரப்பிரதேசம், இந்தியா |
கொள்கை | சமூகவுடைமை சமய சார்பின்மை முன்னேற்றம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல் |
நிறங்கள் | சிவப்பு மஞ்சள் பச்சை |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப்பிரதேசம் சட்டப் பேரவை) | 1 / 403 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
pragatisheelsamajwadiparty | |
இந்தியா அரசியல் |
மூடு