பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி
From Wikipedia, the free encyclopedia
பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி (FIFA Confederations Cup) ] தேசிய அணிகளுக்கிடையே பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். தற்போது ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.பிபா அமைப்பின் கீழ் ஒவ்வொரு கண்டத்திற்கும் அமைக்கப்பட்டுள்ள ஆறு கூட்டமைப்புக்களின் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், தென் அமெரிக்க கூட்டமைப்பு, வடக்கு மத்திய கரீபியன் கூட்டமைப்பு, ஆபிரிக்க கூட்டமைப்பு, ஆசிய கூட்டமைப்பு, ஓசியானா கூட்டமைப்பு), போட்டிகளில் வென்ற அணிகள், உலகக்கோப்பை வென்ற அணி மற்றும் போட்டி நடத்தும் நாட்டின் அணி என எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
தோற்றம் | 1992 |
---|---|
அணிகளின் எண்ணிக்கை | 8 |
தற்போதைய வாகையாளர் | பிரேசில் (4வது முறை) |
அதிக முறை வென்ற அணி | பிரேசில் (4 முறைகள்) |
இணையதளம் | அலுவல்முறை வலைத்தளம் |
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை |
2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகள் வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய பிரேசில் இறுதி ஆட்டத்தில் எசுப்பானியாவை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.