![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Outskirts_of_Mazar-e_Sharif_in_northern_Afghanistan.jpg/640px-Outskirts_of_Mazar-e_Sharif_in_northern_Afghanistan.jpg&w=640&q=50)
பல்கு மாகாணம்
ஆப்கானிஸ்தானின் ஒரு மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பல்கு மாகாணம் (Balkh (பாரசீகம் மற்றும் பஷ்தூ: بلخ, Balx) என்பது ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில், ஒன்று ஆகும். இது நாட்டின் வடபகுதியில் உள்ளது. இந்த மாகாணம் பன்னிரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் தொகை 1,245,100 ஆகும்.[2] இந்த மாகாணத்தில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் பெரும்பாலானவர்கள் பாரசீக மொழி பேசும் சமூகத்தினராக உள்ளனர். மாகாணத்தின் தலை நகராக மசார் ஈ சரீப் நகரம் உள்ளது. இந்த நகரின் கிழக்கு முனையில் மசார் ஈ சரீப் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
பல்கு மாகாணம் Balkh | |
---|---|
![]() வான்வழி காட்சியில் பால்க் மாகாணத்தின் மசார் ஈ சரீப் நகரத்தின் ஒரு சாலை | |
![]() ஆப்கானிஸ்தானில் பல்கு மாகாணம் | |
நாடு | ![]() |
தலை நகரம் | மசார் ஈ சரீப் |
அரசு | |
• ஆளுநர் | அட்டா முகமது நூரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,186.3 km2 (6,249.6 sq mi) |
மக்கள்தொகை (2012)[2] | |
• மொத்தம் | 12,45,100 |
• அடர்த்தி | 77/km2 (200/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-BAL |
முதன்மை மொழிகள் | துரி மொழி, பஷ்தூ மொழி, துருக்குமேனிய மொழி, உசுபேகிய மொழி |
[3] |
மாகாணத்தின் பெயர் பழங்கால நகரான பல்கு நகரில் இருந்து தோன்றியது, இந்தப் பழங்கால நகரம் தற்கால நவீன நகரத்திற்கு அருகில் உள்ளது. இந்த நகரத்தில்தான் புகழ்வாய்ந்த நீல பள்ளிவாசல் உள்ளது, இது ஒரு காலத்தில் செங்கிஸ் கானால் அழிக்கப்பட்டது. என்றாலும் பிற்காலத்தில் தைமூரால் மீண்டும் கட்டப்பட்டது. மஜார்-இ-ஷெரிப் நகரமானது மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் ஐரோப்பா மற்றும் தொலை கிழக்கு போன்ற பகுதிகளுக்கான வர்த்தக பாதைகளில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
பல்கில் நகரமும் பல்கு மாகாணத்தில் பகுதிகளும் வரலாற்றில் அரினாவினதும் குராசானினதும் பகுதிகளின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது.[4]
இது நடு ஆசியவிலிருந்து ஆப்கானித்தான் வருபவர்களுக்கு இரண்டாவது பெரிய நுழைவாயிலாக உள்ளது. பிற நுழைவு வாயிலாக அருகில் உள்ள குண்டூஸ் மாகாணத்தின் ஷிர் கான் பந்தர் உள்ளது.