![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/79/Burdur_in_Turkey.svg/langta-640px-Burdur_in_Turkey.svg.png&w=640&q=50)
பர்தூர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
பர்தூர் மாகாணம் ( துருக்கியம்: Burdur ili) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் எல்லையாக தெற்கே முக்லா மற்றும் அந்தால்யா, மேற்கில் டெனிஸ்லி, வடக்கே அஃபியோன் மற்றும் கிழக்கில் இஸ்பார்டா ஆகிய மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் பரப்பளவு 6,887 கிமீ 2 ஆகும். மக்கள் தொகையானது 258,868 ஆகும். மாகாணத் தலைநகராக பர்தூர் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் பர்தூர் மாகாணம் Burdur ili, நாடு ...
பர்தூர் மாகாணம்
Burdur ili | |
---|---|
துருக்கியின் மாகாணம் | |
![]() துருக்கியில் பர்தூர் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மத்திய தரைக்கடல் பிரதேசம் |
துருக்கியின் இரண்டாம் நிலை துணைப்பகுதி | அந்தால்யா மாகாணம் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | பர்தூர் |
• ஆளுநர் | அலி ஆர்ஸ்லாண்டா |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,887 km2 (2,659 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 2,69,926 |
• அடர்த்தி | 39/km2 (100/sq mi) |
Area code | 0248 |
வாகனப் பதிவு | 15 |
மூடு
இந்த மாகாணமானது துருக்கியின் ஏரிகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தில் பல்வேறு அளவிலான பல ஏரிகள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியது, பர்தூர் ஏரி ஆகும். இந்த ஏரியின் பெயரைக் கொண்டே மாகாணத்தின் பெயர் அமைந்துள்ளது. சால்டா ஏரி மாகாணத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும், இது உலகின் தூய்மையான ஏரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.