From Wikipedia, the free encyclopedia
எதற்காக முதற்பக்கச் செய்திகளில் செய்தி பற்றிய முதன்மைக் கட்டுரையின் தடிப்பு நீக்கப்படுகிறது? அக்கட்டுரையை எளிதில் கண்டுணரவே அதற்கு தடிப்பு வடிவமைப்பு தரப்படுகிறது. காரணம் அறிய விருப்பம். நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:23, 12 நவம்பர் 2013 (UTC)
முகநூலில் இருந்தால் மட்டும் தான் பெரும்பாலானவர்களின் நிழற்படம் (புகைப்படம்) தெரியுமாட்டக்குது :). முன்பு நீச்சல், இப்ப மீசை இல்லாத கனகு :) --குறும்பன் (பேச்சு) 16:59, 17 நவம்பர் 2013 (UTC)
உங்கள் வானொலிப் பேட்டி கேட்டேன். சிறப்பாக இருந்தது. இந்த ஏழெட்டு ஆண்டுகளில் முதன் முறையாக உங்கள் படத்தையும் பார்த்துக் குரலையும் கேட்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்ச்சி. --மயூரநாதன் (பேச்சு) 03:29, 18 நவம்பர் 2013 (UTC) விருப்பம் --மணியன் (பேச்சு) 19:55, 18 நவம்பர் 2013 (UTC)
தங்களின் உரையாடுக ஆவணத்தொகுப்பு 7ல் துடித்த நொஞ்சம் இன்று மகிழ்கிறது.
மேலும் அன்பு கனக்ஸ் "பாவலர்" ஓம் முத்துமாரி அவர்களை நன்கு அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதாலும் தமுஎகச-வின் கலை இலக்கிய இரவு என்கிற கலை நிகழ்ச்சி மேடைகளில் பல நிகழ்வுகள் இணைந்து பணியாற்றியவன் என்கிற நிலையிலேயே "பாவலர்" ஓம் முத்துமாரி என நகர்த்தினேன். தலைப்பு மீண்டும் ஓம் முத்துமாரி என மாற்றப்பட்டுள்ளதே? மீண்டும் "பாவலர்" ஓம் முத்துமாரி என மாற்றலாமா? அருள் கூர்ந்து கருத்திடுக. --யோகிசிவம் (பேச்சு) 15:46, 19 நவம்பர் 2013 (UTC)
கனக்ஸ், தற்போது அந்த ஆண்டு நிறைவுகளை முடிந்தவரை ஆங்கில விக்கியுடன் ஒத்திருக்கும் வகையில் (அதே வேளையில் தமிழ்/தமிழர் தொடர்பான தகவல்களும் அற்றுப்போகாமல்) இற்றைப்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதனால் முக்கியக் கட்டுரைகள் (பொதுவாக மிக முக்கியமானவையே ஆ.வியின் முதற்பக்கத்தில் தோன்ற வைப்பர்) பல உருவாக வாய்ப்புள்ளது. மேலும், நமது இன்று பகுதியும் பன்னாட்டுத் தகவல்களைக் கொண்டு பல்துறை நோக்கு கொண்டதாய் விளங்கும் என்று நினைக்கிறேன். இப்போதுவரைக்கும் சனவரி 1ஆம் தேதியை இற்றைப்படுத்தியதில் 3 புதிய கட்டுரைகள் (அரசியல், விழா, மதம்) தொடங்கினேன். மேலும், பல இணைப்புகளையும் துப்புரவு செய்யவும் நேர்ந்தது. உங்களுக்கு விருப்பமிருப்பின் என்னோடு திட்டத்தில் இணையவும் கனக்ஸ் :) ஏனெனில் கிட்டத்தட்ட அந்தப் பல ஆண்டு நிறைவு வார்ப்புருக்களும் நீங்கள் உருவாக்கியதே. எனக்கும் முக்கியமானது எது என்று அறிய ஒரு ஆள்துணை கிடைத்தாற்போல் இருக்கும். (என் பயனர் பக்க அறிவிப்பைப் பாருங்கள்) நன்றி :) --Surya Prakash.S.A. (பேச்சு) 11:03, 24 நவம்பர் 2013 (UTC)
வணக்கம். பேச்சு:புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் (திரைப்படம்) போன்ற உரையாடல்களைத் தொடர்ந்து இங்கு வேண்டப்படும் கொள்கை மாற்றம் குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:10, 24 நவம்பர் 2013 (UTC)
இந்த கருவியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை, தயவு செய்து உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 07:21, 29 நவம்பர் 2013 (UTC)
பேச்சு:இசைக்கவி ரமணன் பார்த்து அதற்கு மாற்றம் தேவையிருப்பின் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:08, 3 திசம்பர் 2013 (UTC)
Infobox laboratory என்ற வார்ப்புரு இருக்கிறதா ?? சிவகார்த்திகேயன் (பேச்சு) 15:22, 4 திசம்பர் 2013 (UTC)
வார்ப்புரு:Dts/fmt பயன்படுத்த முடியவில்லை உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 17:01, 5 திசம்பர் 2013 (UTC)
வணக்கம் ஐயா! நான் எனது கருத்தினை மையெசுக்யூயெல் பேச்சு பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்தினை தெரியபடுத்துங்கள். ஏழாண்டுகளாக நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து வருகிறீர்கள் என்பதை பார்த்தேன். எனது மரியாதைகள். நன்றி. அண்ணாமலை 03:58, 5 திசம்பர் 2013 (UTC)
இந்த கட்டுரை எப்போது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது என அறிந்துகொள்ளலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:46, 10 திசம்பர் 2013 (UTC)
தமிழ் எண் வரலாறு கட்டுரையில் நீக்கத்தைப் பாருங்கள்.
என்ன செய்கிறோம் என்பது விளங்கவில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 23:10, 13 திசம்பர் 2013 (UTC)
ஒரு தகவல்: விக்கியில் 2014 அந்தமான் படகு விபத்து என்ற தலைப்பில் தொகுக்கும்போது சிறு தடங்கல் ஏற்ப்பட்டது. ஆகையால் கொஞ்சம் தான் தட்டச்சு செய்யமுடிந்தது. இப்போது சரிபார்க்கவும்.--Muthuppandy pandian (பேச்சு) 11:15, 27 சனவரி 2014 (UTC)
புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் ஒன்று ஆனால் ஏற்கனவே உள்ள வங்க தேசம் என்ற கட்டுரை இன்றைய வங்காள தேசத்தைக் குறிக்கிறது. இந்த வங்கதேசமென்ற கட்டுரை வங்காளத்தைப் பற்றியது அல்ல, இதன் எல்லை காசியிலிருந்து இன்றைய கொல்கத்தா வரையிலுமே எனவே வங்காளதேசம் என்ற கட்டுரையின் முந்தைய கட்டுரைப் பெயரான வங்கதேசம் என்று இருப்பதால் இந்த வங்கதேசம் என்ற கட்டுரையை சேமிக்க இயலவில்லை எனவே வங்கதேசம் என்ற பெயரில் கட்டுரை அமைய உதவவும்--Yokishivam (பேச்சு) 03:05, 15 திசம்பர் 2013 (UTC)
இந்த புத்தகம் மட்டுமே மிகவும் நைந்து போன நிலையில் கிடைத்தது- P.V.JAGADEESA IYER-அன்றைய சென்னை ஆர்க்யலாஜிகல் இலாகா மானேஜராக பணியாற்றியுள்ளார்.--Yokishivam (பேச்சு) 14:48, 15 திசம்பர் 2013 (UTC)
நன்றி. இனிமேல் இவ்வாறே எழுதுகிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 09:13, 15 திசம்பர் 2013 (UTC)
vmbbala என்ற பயனர் படிமம் தொடர்பான கேள்வி கேட்டுள்ளார். அவருக்கு உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 16 திசம்பர் 2013 (UTC)
வணக்கம், Kanags/தொகுப்பு 8!
நீங்கள் விக்கித் திட்டம் வானியலில் இணைந்து கொள்ள உங்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:04, 17 திசம்பர் 2013 (UTC)
வானொலி தொடர்பான பகுப்புகளில் வானொலி ஆர்வலர் என்ற பகுப்பை சேர்க்க முடியுமா? - (பேச்சு)
GRB 130427A என்னும் கட்டுரை ஆங்கிலத்தில் இத்தலைப்பில் உள்ளது இதை தமிழில் மொழிபெயர்க்கும்போது இதன் தலைப்பை ஆங்கிலத்தில் உள்ள படியே இட்டு விடுவதா அல்லது தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமா இதை தயவுசெய்து எப்படிமொழிபெயர்ப்பது என்பதிற்கான உதாரணத்தை தரவும்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:20, 20 திசம்பர் 2013 (UTC)
பயனர் பேச்சு:YArukkuyArsonhthamenpathu இப்பயனரின் தடைக்கு காரணம் பொருத்தமில்லாத உள்ளடக்கங்களை சேர்த்தார் எனக் குறிப்பிஅட்ப்பட்டுள்ளது. அவர் அவருடைய பேச்சுப்பக்கத்தில் ஒரு கருத்தும் இடவில்லை. அவருக்கு அப்படி ஒரு பக்கம் இருக்கிறது எனத் தெரியுமா எனவே தெரியவில்லை. கட்டுரைப் பக்கத்துக்கு பேச்சுப்பக்கம் இருக்கிறது எனத் தெரிந்திருக்கலாம். அதனால் தடையை நீக்கக் கோருகிறேன். மேலும் இதைப் போல் ஒரு நிர்வாகியிடம் கேட்பது எனக்கு இரண்டாவது முறை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் அப்பயனரை பேச்சுப்பக்கத்தில் பதில ளிக்கச் சொல்லலாம். அதிலும் அவர் விக்கிக் கொள்கைக்கு முரண்ம்பாட்டார் எனில் மீண்டும் தடை செய்யலாம். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:27, 20 திசம்பர் 2013 (UTC)
ஆம். அவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் உள்ளட்க்கங்களை ஆராய்ச்சிக்கருத்துகள் போல் சேர்ப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அவரை முதலில் அவரின் பேச்சுப்பக்கத்தில் மட்டும் உரையாடச் சொல்லலாம். ஆய்வுக்கருத்துகளை எழுதுவதற்கு பதிலாக ஒரு நூலில் படித்தை ஒரு பத்தி மட்டும் நடுநிலை தவறாமல் எழுதுங்கள் எனச் சொல்லிப்பார்க்கலாம். அதன் படி அவர் செயல்படவில்லை எனில் அவரை தடை செய்வது பொருந்திவரும்.
என்னுடைய முதல் 5 கட்டுரைகளும் விக்கிப்பீடியாவில் அழிக்கப்பட்டது. பின்னர் சோடாபாட்டில் கைப்பேசியில் எப்படி விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று என்னுடன் உரையாடித்தான் நான் தொடர்ச்சியான பங்களிப்புகளை அளித்தேன். அந்த ஐந்து கட்டுரைகளும் இவர் எழுதியதை விட மிகக் கொடூர பயங்கரமாக இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இவர் பயங்கரக் கொடூரமாக எழுதுகிறார். சொல்லிப்பார்த்து கேட்கவில்லை எனில் தடை செய்து விடலாம்.
அவர் முகநூல் குழுமத்தில் சந்திரசேகர் ஆறுமுகம் என்ற பெயரில் இருக்கிறார். [www.facebook.com/chandrasekaran.arumugam.90] இது தான் அவர் முகவரி. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:52, 23 திசம்பர் 2013 (UTC)
நான் முதலில் அவர் பேச்சுப்பக்கத்தில் மட்டும் முதலில் உரையாடத் தயாரா எனக் கேட்டுப்பார்க்கிறேன். அவர் சரி என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 23 திசம்பர் 2013 (UTC)
நான் உங்களைக் குறை சொல்லவில்லை. ஒரு புதுப்பயனர் போய்விடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுக் காட்டினேன். எனக்கு அத்தனை இடங்களையும் கேள்விகளையும் பார்த்து உரையாட தற்போதைக்கு நேரமில்லை. அதனால் அனைத்தையும் கவனிக்க முடியாத நிலைமை. அதைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:14, 23 திசம்பர் 2013 (UTC)
\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 12:55, 21 திசம்பர் 2013 (UTC)
தமிழ்நாடு கட்டுரையில் பொருளாதாரம் பகுதியில் சேர்த்துள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் சேர்த்துள்ளேன். நன்றி
மிக மிக முக்கியமான அசைவு விபரியல் (Kinematics) எனும் கட்டுரை கவனிப்பாரற்று உள்ளது. இது போன்ற கட்டுரைகளை விரிவாக்க பலரது உதவி அவசியம். --G.Kiruthikan (பேச்சு) 07:28, 26 திசம்பர் 2013 (UTC)
வார்ப்புரு:Topics related to India வார்ப்புரு மாற்றங்கள் வலைவாசளில் ஏன் தெரியவில்லை உதவவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 01:25, 21 சனவரி 2014 (UTC)
பொன்னேர் உழுதல் பேச்சு --Sengai Podhuvan (பேச்சு) 21:38, 26 திசம்பர் 2013 (UTC) == தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா ==
நான் விக்கி தமிழில் பதிவேற்றம் செய்த கட்டுரை நீக்கப் பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு என காரணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு செய்வது தவறா? அல்லது அந்தக் கட்டுரையின் கருத்துக்களில் தவறு ஏதேனும் உள்ளதா? தயவு செய்து மீள்பார்வை செய்து, நீக்கப்பட்டதை மீண்டும் அனுமதித்தால் நல்லது.
நான் விக்கிதமிழுக்கு புதியவன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைச் சரி செய்கிறோம். இல்லாமல் அழிப்பது எங்களை மிகவும் சோர்படையச் செய்கிறது. விக்கி தமிழில் நீ எழுதக் கூடாது என நீங்கள் சொல்கிறீர்களா? என்பதும் தெளிவாக எனக்கு புரியவில்லை. ஆவலுடன் மீள்பதிவுக்காக காத்திருக்கிறேன்.
விக்கியில் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும் அதாவது குறுங்கோள் எனும் கட்டுரை குறள்கோள் (dwarf planet) எனும் தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அத்துடன் வார்ப்புரு:சூரியக்குடும்பத்தில் சிறுகோள்கள் என்று நீங்கள் இணைப்பு இட்டிருக்கிறீர்கள் அதை குறுங் கோள்கள் என மாற்றி விடுங்கள். ஏனெனில் குறுங் கோள் என்பதற்கு ஆங்கிலப் பதம் (minor planet) ஆகும். சிறு கோள்களுக்கு ஆங்கிலத்தில் (asteroids) எனப் பெயர் சிறுகோள்கள் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. குறுங்கோள்களுக்கு/ள் தான் சிறுகோள்கள் அடங்கும். asteroids belongs to minor planets.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:48, 29 திசம்பர் 2013 (UTC)
இந்தக் கட்டுரையை நீங்கள் தொடங்கியதாக வரலாற்றில் பார்த்தேன். கல்கி பத்திரிகை ஆசிரியராக இருந்தது, மீரா திரைப்படத்தை சதாசிவத்துடன் சேர்ந்து தயாரித்தது, காற்றினிலே வரும் கீதம் என்ற காலத்தால் அழியாத பாடலை இயற்றியது போன்ற தகவல்கள் கட்டுரையில் இடம் பெறவில்லை. ஏதாவது காரணம் உண்டா அல்லது சேர்க்கலாமா? நன்றி. வணக்கம் Uksharma3 (பேச்சு) 14:40, 30 திசம்பர் 2013 (UTC)
I am still compiling பலுசிஸ்தான் விடுதலை இராணுவம். give me a minute to complete it. thanks.--ஆர்.பாலா (பேச்சு) 10:28, 31 திசம்பர் 2013 (UTC)
சில வேளைகளில் முரண்பாடான தொகுப்பு ஏற்பட்டிருக்கலாமோ?! ஏனெனில் எனக்கு ஏற்பட்டது.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 22:10, 31 திசம்பர் 2013 (UTC)
அமைவிடத்தை குறிப்பாகவும், விக்கிமேப்பியா படமாகவும் கொடுத்திருந்தேன். அவை நீக்கப்பட்டுள்ளன. என்ன காரணம் எனத் தெரியலாமா? Uksharma3 (பேச்சு) 04:11, 1 சனவரி 2014 (UTC)
அமைவிடத்தை நான் குறிப்பாக சேர்த்திருந்தேன். அதைக் காணாதபடியால் நீக்கப்பட்டதாக தவறுதலாக எண்ணிவிட்டேன். மன்னிக்கவும். உங்கள் ஆலோசனைப்படி திருப்பாம்புரத்தை தனிக் கட்டுரையாக எழுதி, அமைவிடத்தையும், விக்கிமேப்பியா இணைப்பையும் அங்கே சேர்த்துவிட்டேன். Uksharma3 (பேச்சு) 05:44, 1 சனவரி 2014 (UTC)
நடப்பு நிகழ்வு வார்ப்புருவில் நான் செய்த மாற்றத்தை மீளமைத்துள்ளமையைக் கண்டேன். தற்போது அந்த வார்ப்புரு பயனபடுத்தும் கட்டுரைகளுக்குச் சென்றால் அங்கே as of எனும் ஆங்கில வார்த்தை பகுப்புகளில் தோன்றுகின்றது. இதற்கு ஏதும் தொழில்நுட்பக் காரங்கள் உள்ளதா? அறியும் அவாவில் கேட்கின்றேன் மற்றும்படி எந்தப்பிரச்சனையும் எனக்கில்லை ;) --ஜெ.மயூரேசன் (பேச்சு) 05:49, 2 சனவரி 2014 (UTC)
இவர் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் அதிபராக பணியாற்றியுள்ளார். காலப் பகுதி தெரியவில்லை. முடிந்தால் அறிந்து சேர்த்து விடுகிறீர்களா? நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 13:59, 3 சனவரி 2014 (UTC)
வணக்கம். இங்கு பயனர் பக்கத்தில் உள்ள கட்டுரையை புதிய பக்கத்திற்கு நகர்த்துவது சரியா?--நந்தகுமார் (பேச்சு) 20:17, 4 சனவரி 2014 (UTC)
தமிழ்நாட்டுப் பொருளாதாரம், இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரம், பெட்டியை மாற்றுவது எப்படி? "தொகு" பக்கத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்ற பெட்டி இல்லை. Raghukraman (பேச்சு) 13:27, 6 சனவரி 2014 (UTC)
translatewiki.net இல் பங்களிக்க நான் புதிய கணக்கை உருவாக்க வேண்டுமா அல்லது புகுபதிகை செய்ய வேண்டுமா? ஏனெனில் என் பெயரையும் கடவுச்சொல்லையும் சரியாக உள்ளிட்டும் புகுபதிகைத் தவறு "Shrikarsan" என்ற பெயரில் பயனர் எவருமில்லை.பயனர் பெயர், பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்ற வித்தியாசத்திற்குட்பட்டது. எழுத்துப் பிழைகளைச் சரி பார்க்கவும், அல்லது புதிய பயனர் கணக்கொன்றை உருவாக்கவும். என்று வருகின்றது தயவுசெய்து உதவுங்கள். (என் பயனர் பெயரையும் கடவுச்சொல்லையும் சரியாகவே உள்ளிட்டேன்)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:36, 11 சனவரி 2014 (UTC)
இந்தப் பெயரில் கட்டுரை எழுதியுள்ளேன். அதே பெயரின் பகுப்பு இருப்பதால் கட்டுரையின் தலைப்பு மாற்றப் பட வேண்டுமா? வானொலி ஆர்வலர்கள் (கட்டுரை) என மாற்ற வேண்டுமா? ஆம் எனில் நீங்களே மாற்றிவிடுகிறீர்களா? நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 11:46, 19 சனவரி 2014 (UTC)
ஆங்கிலத்தில் கட்டுரை இங்கே உள்ளது. விக்கியில் இணைப்பு கொடுத்துள்ளேன். அவர்கள் பெரும்பாலும் தொழிநுட்பத்தை முன்நிறுத்தி எழுதியுள்ளார்கள். நான் மக்கள் பயன்பாடு என்ற கோணத்திலிருந்து எழுதியுள்ளேன். மலையாளத்திலும் கட்டுரை உள்ளது. அதிலும் டி-எக்ஸிங் என்றே தலைப்பிட்டு ஆங்கில கட்டுரை போலவே தொழிநுட்ப கோணத்தில் எழுதியிருக்கிறார்கள் போலிருக்கிறது. (மலையாளம் தெரியாததால் நிச்சயமாக கூற முடியவில்லை.)
தமிழ் விக்கிக்கு ஒரு புதிய subject கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். வானொலி, ஒலிபரப்புக் கலை என்ற தமிழ் கட்டுரைகள் பார்த்தேன். திருத்தி எழுத வேண்டும், இப்போதைக்கு என்னால் முடியாது. பார்ப்போம். - Uksharma3 (பேச்சு) 02:12, 20 சனவரி 2014 (UTC)
வணக்கம்! இந்தியப் பொதுத் தேர்தல், 2014 எனும் கட்டுரையில் 'எதிர்காலத் தேர்தல்கள்' எனும் பகுப்பினை நீக்க இயலவில்லை. வார்ப்புருவில் திருத்தம் தேவைப்படும் என உணர்கிறேன். உரியன செய்யுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:47, 23 சனவரி 2014 (UTC)
மிக்க நன்றி, அண்டன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:05, 23 சனவரி 2014 (UTC)
ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 24 சனவரி 2014 (UTC)
இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும். - Uksharma3 (பேச்சு) 12:37, 26 சனவரி 2014 (UTC)
எனது கட்டுரை ஒன்று புதிதாக கண்டறியப்பட்ட தொல்பழங்கால பாறை ஓவியங்களை பற்றியது. இப்போது காணவில்லை அருள் கூர்ந்து விளக்கவும். இது யாரையும் புண்படுத்தாத, விக்கியின் மன்புகளுக்கு சேதம் விளைவிக்காத ஒரு கட்டுரை. மேலும் தமிழகத்தின் தொன்மையை உலகறியச் செய்யும் ஒரு நடுநிலையான கட்டுரை. இது தொடர்ந்து தடையில் இருந்தால் ஒரு அட்மின் ஆகும் வரை மருத்தவ விடுப்பில் விக்கியில் செயலாற்றுவதை தவிர எனக்கு வேறு வாய்ப்பில்லை. நடுநிலயான கட்டுரைகள் சப்பையான காரணங்களை கொண்டு ஒடுக்கப் படுவது முறையல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றிகளுடன் மது --மது 04:03, 2 பெப்ரவரி 2014 (UTC)
நீங்கள் பங்களித்த மலக்குகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 1, 2014 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தேசவழமைச் சட்டம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 1, 2014 அன்று வெளியானது. |
வணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:41, 9 பெப்ரவரி 2014 (UTC)
வணக்கம் என்னுடைய கட்டுரையின் தலைப்பை மாற்ற எனக்கு உதவிடுமாறு வேண்டுகிறேன். வேட்டுவ கவுண்டர் என உள்ள தலைப்பை கொங்கு வேட்டுவ கவுண்டர் என மாற்ற வேண்டும்.
இசுபிரிட் தளவுளவி- ’Rover’ என்பது தளவுளவியா அல்லது தளவுலவியா (தள உலவி) என்ற சந்தேகம் வருகிறது. தெளிவுபடுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:10, 16 பெப்ரவரி 2014 (UTC)
அடி (கால்-அடி) - இணைப்புக் குறியீடு --Sengai Podhuvan (பேச்சு) 05:13, 22 பெப்ரவரி 2014 (UTC)
பேச்சு:மொழிமுதல் குற்றியலுகரம் பாருங்கள்.--Sengai Podhuvan (பேச்சு) 18:57, 26 பெப்ரவரி 2014 (UTC)
நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் உரையாடலில் நீங்கள் நடந்து கொண்டது தொடர்பாக சில கருத்துக்கள். மரியாதையாக கருத்துடன் பண்பாக உரையாடுங்கள். சொற்கள் அகராதியில் இருக்கிறதென்பதற்காக எடுத்து வீச வேண்டாம். மரியாதையாகத்தான் உங்களுடன் உரையாடுகிறேன் அதையே எதிர்பார்க்கிறேன். முன்பும் என்ன கேள்வி? யார் எழுப்பியது? அவர்களையே இனி இற்றைப்படுத்தச் சொல்லுங்கள் என்று பொதுவிடத்தில் பேசுவது போன்றல்லாது உரையாடினீர்கள். விக்கிக்கு ஏற்புடையதாயினும், உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து உங்கள் பெயரைச் சொல்லி அழைக்காது பண்பாக, பல இடங்களில் உங்கள் உரையாடலைத் தவிர்த்தும் உள்ளேன். அப்படியிருக்க என்னை அடாவடித்தனம் செய்பவனாக குறிப்பிட்டு, அடாவடித்தனம் என்பதற்கு புது வடிவமும் கொடுக்க முற்படுகிறீர்கள். என் விட்டுக் கொடுப்புக்களை பலவீனமாகக் கருதாதீர்கள். உங்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ளலாம் என்றால், நீங்களோ கல்லூரி, பள்ளி மாணவர்கள் போன்று நடந்து கொள்கிறீர்கள். தயவு செய்து இங்குள்ள மற்றப் பெரியவர்கள் பழகுவதுபோல் பெரிய மனிதராகப் பழகுங்கள். நன்றி! --AntonTalk 01:48, 27 பெப்ரவரி 2014 (UTC)
நிருவாக அணுக்கம் நீக்கல் பக்கத்தில் பதில் தந்திருக்கிறேன். இன்னும் உங்கள் கேள்விகளுக்கு விடை ஏதும் இல்லை என்றால் இங்கு தெரியப்படுத்தவும். பதில் அளிக்க அணியமாக உள்ளேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:03, 27 பெப்ரவரி 2014 (UTC)
இந்தக் கட்டுரையில் பெரும்பாலும் நீங்கள் பங்களித்திருப்பதால் இதனை எழுதுகிறேன்.
தமிழோசையில் 1974ல் சேர்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. அதனை சரி பார்க்கவும். பிபிசி யில் தமிழ் ஒலிபரப்பு 1941ல் தொடங்கியது. அப்போது அதற்கு பெயர் எதுவும் இல்லை.
1947 இல் சிவபாதசுந்தரம் "தமிழோசை" எனப் பெயரிட்டார். வாரத்தில் இரண்டு நாட்கள் (செவ்வாய், வியாழன்) ஒலிபரப்பானது.
சிவபாதசுந்தரம் 1991 இல் பிபிசி தமிழோசை சங்கரண்ணாவுக்கு அளித்த பேட்டியின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. அதனை இணையத்தில் ஏற்ற முடிந்தால் கட்டுரையில் இணைப்பு கொடுத்துவிடுகிறேன். - Uksharma3 (பேச்சு) 13:18, 27 பெப்ரவரி 2014 (UTC)
அவரது பேட்டியை இப்போது தான் தெளிவாகக் கேட்க முடிந்தது. அவரே தகவல்கள் தந்துள்ளார். அவற்றை கட்டுரையில் சேர்த்துள்ளேன். எப்போது இலங்கை திரும்பினார் என்பது தெரியவில்லை. பேட்டியை இணையத்தில் ஏற்றியபின் இணைப்பு கொடுக்கிறேன். - Uksharma3 (பேச்சு) 03:23, 28 பெப்ரவரி 2014 (UTC)
கோழி-முட்டை முட்டை-கோழி கதை முடிவுறாதது அல்ல. வழக்கமாக தவறாக புரிந்து கொள்பவர்கள் அதை முடிவுறாதது என்று கருதுகின்றனர். கோழியில் இருந்து முட்டை வரும். முட்டையில் இருந்து கோழி வராது. குஞ்சு தான் வரும். கதை முடிவுற்றது. :) --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:27, 27 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம் அரிய கண்டுபிடிப்பு தென்காசியார் நோபல் பரிசிற்கு முயற்சி செய்யலாம். பரிசிற்கான துறை மருத்துவம் அல்ல அமைதி!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:53, 27 பெப்ரவரி 2014 (UTC)
ஆலோசனைக்கு நன்றி செல்வசிவகுருநாதன் அவர்களே-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:35, 27 பெப்ரவரி 2014 (UTC)
அப்பாடா, நகைச்சுவை உணர்வோடு ஒரு உரையாடலை இங்கே இப்போது தான் படிக்க முடிந்தது. :) - Uksharma3 (பேச்சு) 03:28, 28 பெப்ரவரி 2014 (UTC)
இது சீண்டல் அல்ல. நான் மேற்கூறியதை மீண்டும் படியுங்கள். கோழி முட்டைக் கதையை வாக்கெடுப்புப் பக்கத்தில் கூறினால் தொடர்பில்லாமல் இருக்கும் என்பதால் இங்கே கூறினேன். நீங்கள் தான் வாக்கெடுப்பு பக்கத்தில் கோழிமுட்டை கதையை தொடங்கி வைத்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:30, 28 பெப்ரவரி 2014 (UTC)
விருப்பம்:எம்பெருமான்!. சுப்பிரமணிய சுவாமிகளின் கதைகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது ஓகோ!.. எனினும் அவரிடம் ஆதாரம் தான் இல்லை, என்ன செய்வது பரமேஸ்வரா? எல்லாம் அந்தப் பார்வதியின் செயல் தான். இது மட்டும் பிள்ளையாருக்குத் தெரிந்தால் கதி அதோ கதிதான் தன் மாமன், மாமி என பட்டாளங்களையே கூட்டி வந்து விடுவார். எல்லாம் அந்த நாராயணன் கையில் தான் உள்ளது. பிரம்மனே இச்சோதனையில் இருந்து சுப்பிரமணிய சுவாமிகளைக் காப்பாற்று.--aho;- பேச்சு 08:00, 1 மார்ச் 2014 (UTC)
நீங்கள் கடைசியாக என் பேச்சுப் பக்கத்தில் கருத்திடும் முன்னர் நான் கோழி செய்யவில்லை. தற்போது தான் செய்து பார்த்தேன்.
//தப்பியோடப் பார்க்காதீர்கள்.//
ஆமாப்பா. உங்களைப் பார்த்து நான் அப்படியே பயந்து நடுங்கிவிட்டேன். தப்பி ஓடி திருப்பி இப்போ தான் வந்திருக்கிறேன். எனக்கு வேலைநேரம் மதியம் முதல் இரவு வரை அப்படின்னு சொன்னாலும் மதியம் முதல் அடுத்த நாள் காலை வரை இழுத்துவிடும். இன்னைக்கு தொலைநிலைக்கல்வி வகுப்பு முடிஞ்சு இப்போதான் வாரேன். அதனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நான் கிளைன்டு விர்டுவல் மிசினுக்கும் விக்கிப்பீடியாவுக்கும் முகநூலுக்கும் தாவிக்கிட்டே இருப்பேன். எங்க விரைவா பதிலளிக்க முடியுமோ அங்க பதிலளித்து விடுவேன். தப்பி ஓடுவது என்பது கீழ்வரும் வகையினருக்கு தான் பொருந்தும்.
அது சரி. நான் நேற்று உங்களுக்குப் பதிலளித்து நீங்கள் மறுமொழி தரும் வரை 11 மணி நேர இடைவேளை இருந்தது. அப்போ நீங்க ஓடிப்போயிட்டா வந்தீங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 1 மார்ச் 2014 (UTC)
//பிரம்மனே இச்சோதனையில் இருந்து சுப்பிரமணிய சுவாமிகளைக் காப்பாற்று.//
User:L.Shriheeran ஆகா இத விட கத விட முடியுமா என்ன? பிரம்மன் சுப்பிரமணியனை காப்பாத்தியதாக எந்தக் கதையும் இல்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. மாறாக சுப்பிரமணியன் தான் பிரம்மனை வேதத்துக்கு பொருள் தெரியாதலால் தலையில் குட்டி சிறையில் அடைத்தான். கௌமாரம் படி சுப்பிரமணியனே முதற்கடவுள். பரப்பிரம்மமான சுப்பிரமணியன் இவ்வுலகின் இன்பம் பெற தான் உருவாக்கிய சிவனுக்கே மகனாய் பிறந்து இன்புற்றாராம். சுப்பிரமணியன் தன்னையே தான் காத்துக் கொள்வார். அவருக்கு பிரம்மன் உதவி எல்லாம் தேவையே படாது.
மேலும் யாம் கடவுளும் அல்ல. உம்மை மாதிரி தளபதியும் அல்ல. ஒரு பாவப்பட்ட புலவன் மட்டுமே. :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 1 மார்ச் 2014 (UTC)
ஆகா! என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு--aho;- பேச்சு 15:29, 1 மார்ச் 2014 (UTC)
ஆஆஆஆஆஆஆஆஆஆஆதவா அது ஆகா!...--aho;- பேச்சு 16:20, 1 மார்ச் 2014 (UTC)
//என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தான் மறுமொழி தரச் சொல்லிச் சொன்னேன்.//
ஏன் என் பேச்சுப்பக்கத்தில் அவசரத்தில் பதில் தந்தேன் என நான் விளக்கிவிட்டேன்.
// நீங்கள் உங்கள் பக்கத்தில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டீர்கள். //
ஒழிந்து கொள்ளவில்லை என்று ஏற்கனவே விளக்கிவிட்டேன். ஒழிந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பயந்தவர்களாக இருப்பார்கள்.
//அப்படித்தானே. சரி எப்படியோ, நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. கோழி செய்து பார்த்ததில் நீங்கள் கண்டது என்ன? பகிரங்கமாகக் கூறுங்கள். //
கோழி-முட்டை கதையை நீங்கள் முதலில் ஆரம்பிக்கவில்லை. நீங்கள் முதலில் ஆரம்பித்ததாகச் சொன்னதை திருப்பிப் பெற்றுக்கொள்கிறேன்.
//பகிரங்கமாக எனது பயனர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.//
//இது நான் பகிடிக்குச் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட இரு வகைக்கும் (தப்பியோடல்) நீங்களே பொருத்தம் என்பதை இப்போது ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். //
நான் தப்பி ஓடினால் தான் ஒப்புக்கொள்வது/கொள்ளாதது எல்லாம். தப்பி ஓடுபவன் இப்படி எல்லாம் பதில் தந்து கொண்டிருக்க மாட்டான்.
//உங்கள் நக்கல்களுக்கும் பகிடிகளுக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை மறவாதீர்கள். ஒரு பொதுப்பக்கத்தில் இவ்வாறு நக்கல் அடிப்பது குறித்து நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.//
வாக்கெடுப்புப் பக்கத்தில் அடாவடித்தனம் என்று ஆரம்பித்த பிறகுதான் இந்த உரையாடல் என்பதை நினைவில் வைக்கவும். அதற்கும் முன்னர் கூட நீங்கள் கூறிய கருத்துகளை நான் ஏதும் சொல்லவில்லையே. திருத்திக்கொள்வதை பற்றி நானும் உங்களுக்கு நிறையச் சொல்லலாம். அங்கு மாற்றுக்கருத்தை இன்னொரு பயனரும் தான் தெரிவித்தார். அவரின் கருத்தை நான் ஏதும் சொல்லவில்லையே. எங்கு எப்போது எப்படி பேச வேண்டும் என்று நீங்கள் சொல்லித்தர வேண்டாம்.
//இது முதல் முறையல்ல. //
இதையே நானும் உங்களுக்கு திருப்பிச் சொல்லலாமே. அடாவடித்தனம், சீண்டல் எனக்கு கைவந்த கலை, தப்பி ஓடி விட்டேன், அதை வேறு ஒப்புக்கொண்டதாக சொல்லியது. இப்படி எல்லாம் பேசியது யார்? என்னைப் பொறுத்தவறை விக்கிப்பீடியாவில் மன்னிப்பு கேட்பது என்பது எல்லாம் பெரிய வார்த்தை. திருப்பிப் பெற்றுக்கொள்வது, வருத்தம் தெரிவிப்பது, அடித்துத் திருத்துவதே போதுமானது.
நான் செய்த தவறு கோழிமுட்டைக் கதையை நீங்கள் ஆரம்பித்தது எனச் சொல்லியது தானே. அதை திருப்பிப் பெற்றாகிவிட்டது. உங்களைப் போல் அடாவடித்தனம், ஓடி ஒழிதல், சீண்டல் உங்களுக்கு கை வந்த கலை என்றெல்லாம் தீர்மானமான பழியை நான் யார் மேலும் போடவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:03, 2 மார்ச் 2014 (UTC)
ஒரு infobox சேர்த்துவிடுகிறீர்களா? நன்றி. - Uksharma3 (பேச்சு) 03:31, 2 மார்ச் 2014 (UTC)
விக்கிப்பீடியாவின் கொள்கைகளின்படி வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது என்றிருக்க www.katturai.com தளத்தினை எப்படி நீங்கள் விளம்பரங்கள் அல்ல எனக் கருதலாம்? --AntonTalk 10:54, 3 மார்ச் 2014 (UTC)
www.katturai.com தளத்திற்குரிய பயனர் வேறு கட்டுரைகளில் இத்தளம் உட்பட்ட பல முகவரிகளைச் சேர்த்துள்ளார். இதனடிப்படையில் விக்கிப்பீடியாவின் கொள்கைகையின்படி எப்படிச் செயற்படுவது? --AntonTalk 10:59, 3 மார்ச் 2014 (UTC)
மாயவரத்தான், http://www.fly2pattaya.com/?page_id=43 - இங்குள்ள இரமேசும் http://www.katturai.com/?page_id=1891 இங்குள்ள மாயவரத்தானும் நீங்கள் தான் என்று நினைக்கிறேன்? அப்படியென்றால், ஒரே நபர் தன்னுடைய இன்னொரு தளத்துக்கு விளம்பரம் தர affiliate tracking தேவையில்லை :) நிற்க !
ஆத்திரேலியா பக்கத்தில், கட்டுரை.காம் இணைப்புகளைச் சேர்த்தவர் கலையரசி. இவருடைய செயற்பாட்டிலோ குறிப்பிட்ட இணைப்புகளிலோ வணிக நோக்கம் இருப்பதாக கருத இடம் இல்லை.
ஆனால், தேனி சுப்பிரமணியின் நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொண்டு செய்தி வெளியிடுகிறீர்கள். பிறகு, அதையே மேற்கோளாகச் சுட்டி தேனி சுப்பிரமணி தனது கட்டுரையில் சேர்க்கிறார். அவரை நீங்கள் பேட்டி எடுப்பீர்கள். பிறகு, அவர் அதை ஊடக இணைப்பாக தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்த்து விடுவார். தொடர்ந்து தன்னைப் பற்றி தங்கள் தளத்தில் வந்துள்ள செய்திகளுக்கு இணைப்பு தந்து விடுவார். இவையெல்லாம் என்ன வகையான விக்கிப்பீடியா கொள்கையின் கீழ் வருகிறது என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 14:37, 3 மார்ச் 2014 (UTC)
விக்கிப்பிடியா எந்த ஒரு தனிமனிதரின் சுய விருப்பு, வெறுப்புகளுக்கோ, குழு மனப்பான்மைகளுக்கோ இடமல்ல. எனவே தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியை விட்டு விட்டு எதுவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. -மாயவரத்தான் (பேச்சு) 14:46, 3 மார்ச் 2014 (UTC)
பார்க்க: விக்கிப்பீடியா:வணிக இணைப்புகள் கண்காணிப்பு. இணைக்கபட்டுள்ள தளத்தின் பக்கம், குறிப்பிட்ட கட்டுரைத் தலைப்பு தொடர்பாக நேரடியாக வணிக நோக்கு கொண்டிருந்தால், வணிக இணைப்பு என்று கருதி நீக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, ஆத்திரேலியா தொடர்பான கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள பக்கம் ஆத்திரேலியாவுக்குச் சுற்றுலா விற்பனை செய்தாலோ ஆத்திரேலியா பற்றிய ஒரு நூலை விற்பனை செய்தாலோ வணிக இணைப்பாக கருதலாம். ஆனால், அப்படி ஏதும் இல்லாமல் வேறு ஏதாவது ஊர் தொடர்பாக விற்பனை, பொதுவான விளம்பரங்கள் இருந்தாலோ வணிக இணைப்பாக கருத இயலாது.
தமிழ் இணையத்தில் உள்ளடக்கம் குறைவு, தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்கள் குறைவு ஆகியவற்றை முன்னிட்டு வெளியிணைப்புகள், மேற்கோள்கள் தொடர்பாக மிகவும் நெகிழ்வான ஒரு நடைமுறையையே கொண்டிருக்கிறோம். இவற்றில் இன்னும் கூடுதல் தரத்தைக் கொண்டு வர வேண்டும் எனில் தொடர்புடைய கொள்கைகளில் மாற்றங்கள் கோரலாம்.
குறிப்பிட்ட பயனர் தன்னுடைய தளத்தை தானே இணைக்காவிட்டாலும் அவருக்கு அறிமுகமான இன்னொருவர் தொடர்ந்து அத்தகைய இணைப்புகளைத் தரலாம். இது போன்ற விசயங்களை கொள்கைகள் மூலம் தடுக்க முடியாது. வெளி இணைப்பு குறிப்பிட்ட தலைப்புக்குப் பொருத்தமான உயர் தரமுடைய இணைப்பா என்று மட்டும் காணலாம். --இரவி (பேச்சு) 12:31, 3 மார்ச் 2014 (UTC)
வெளி இணைப்புகள் தொடர்பானவை என்றால் ஆலமரத்தடியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் உரையாடலாமே. மேலும் எட்டாவது விதியைப் பார்க்கவும்.
//ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.//
அதாவது ஒரு உதாரணத்துக்கு கனக சிறீதரனும் நானும் பேசி வைத்துக்கொண்டு என்னுடைய தென்மதுரை முதல் தென்காசி வரை வலைபூவை அவரும் அவருடைய வலைபூவை நானும் கமுக்கமாக இணைத்து இருவரும் ஆதாயம் அடைய முடியும். ஆனால் இவர்கள் ஆதாயமுரண் தேடத்தான் அப்படிச் செய்கிறார்களா என்பதை எப்படி உறுதிப்படுத்த முடியும்? கட்டுரை.காமை கொடுக்கும் போது அது ஒரு பொதுத்தளம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு வரலாற்று சிக்கல் பற்றிய கட்டுரையில் கட்டுரை.காம் போன்ர தளங்களை கொடுக்கும் போது அதில் வரலாறு பற்றி எழுதுபவர் வரலாற்று நிபுணரா என்று எப்படித் தெரியும். ஆக வெளி இணைப்புகலில் வணிக நோக்கம், கட்டுரை தொடர்பு தரம் என பலவற்றை பார்க்க வேண்டுமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:03, 3 மார்ச் 2014 (UTC)
இங்குள்ள உரையாடல் ஆஸ்திரேலியா கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வெளியிணைப்பு பற்றியது. அதை இணைத்தவர் வணிக நோக்கில் இணைக்கவில்லை. ஆனால் அது தேவையில்லை என்பதுதான் என் நிலை. சில செயற்பாடுகள்/சிலருடைய செயற்பாடுகள் சில ஐயங்களுக்கும், அது சோதனைகளுக்கு இட்டுச் செல்லும். இதனைச் செய்ய முடியாது என்று எவரும் சொல்ல முடியாது. எ.கா: விக்கிப்பீடியா:கைப்பாவை சோதனை அல்லது ஆட்டுவிப்பவர் (Sockmaster) / கையாட்கள் (Meatpuppets) பற்றிய அறிதல். எனவே, இங்கு விளக்கம் கேட்கப்பட்டது பயனர் பற்றியதல்ல. தேவைப்பட்டால் தேவைப்படும் இடத்தில் கேட்கப்படும். ஆதாரம், ஆதாயம் என்ற நிலைப்பாட்டிலிருந்து என்றால் இங்கிருந்தே ஆரம்பிக்கலாம். புரிதலுக்காக: //ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்// என்னுடைய ஆக்கப்பூர்வமாக பங்களிப்புக்கள் விக்கியினுள் இருக்கின்றன. நான் திடீரென்று முளைத்து வந்தவனோ, யாருக்கும் சார்புடையவனும் அல்ல. என் பயனர் பக்கத்தில்கூட என் மென்பொருள் வலைப்பக்கங்களில் ஒன்றையாவது இணைக்கவில்லை, எனக்குத் தெரிந்தவர் என்பதற்காக யாருக்கும் கட்டுரையும் உருவாக்கவில்லை. என் கைகள் அழுக்காக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாகவுள்ளேன். உரையாடல் தொடர்ச்சியின் நிமித்தம் இங்கு பதிலளிக்கிறேன். மேலும் இது பற்றி உரையாட வேண்டுமாயின் குறிப்பிட்ட வெளியில் தொடரலாம். --AntonTalk 17:08, 3 மார்ச் 2014 (UTC)
மீண்டும் என் உரையாடலைப் பார்த்து, விரும்பினால் அதற்குப் பதிலளிக்கவும். --AntonTalk 18:27, 3 மார்ச் 2014 (UTC)
User:மாயவரத்தான் இந்த உரையாடல் எதுவும் உங்களை வைத்து தொடரவில்லை. உள்நோக்கம் கொண்டு உங்கள் மீது பழி போடுகிறோம் என்பது எல்லாம் உங்களின் அதீத கற்பனையே. இதில் உள்நோக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.
//இப்போது திடீரென வந்து இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிப்பது சரியல்ல. //
திடீரென ஆர்ம்பிப்பது சரியில்லையா? அப்படி ஏதும் விக்கி விதி இல்லையே. இதைப்போல் தரக்கண்கானிப்பிலும், தவறாகச் செய்த சில விடயங்களை விக்கியில் திருத்துவதும் ஏற்கனவே நடந்துள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:57, 3 மார்ச் 2014 (UTC)
தற்போது வெளியாகி அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி, அப்படத்தின் பெயர் தலைப்பாக இடப்பட்டு, கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதேபோல தொலைக்காட்சித் தொடர்கள் அவற்றின் பெயர் தலைப்பாக இடப்பட்டு கட்டுரைகள் எழுதப் படுகின்றன. இவை எவ்விதம் அனுமதிக்கப் படுகின்றன? அப்படியானால் கடைகளில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி கட்டுரை எழுதலாமா? உதாரணமாக "கம்ப்ளான்" என ஒரு கட்டுரை எழுதலாமா? - Uksharma3 (பேச்சு) 02:28, 8 மார்ச் 2014 (UTC)
ஜார்வா மற்றும் ஜாரவா பழங்குடியினர் கட்டுரைகளில் ஒன்றிணைப்பு தொடுப்பிணைப்பினை இணைத்திருந்தேன். இரண்டாவது கட்டுரையைத் தொடங்கிய பயனர் கிருஷ்ணமூர்த்தி, கிட்டத்தட்ட முதல் கட்டுரைகளில் இருந்த அதிகப்படியான விவரங்களை இரண்டாவதில் சேர்த்துவிட்டு கட்டுரைகளை இணைத்துவிடும்படி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நான் என்னால் இயலாது, நிர்வாகிகள் மட்டுமே செய்ய முடியும் என்று பதிலளித்தேன். இப்பொழுது ஜார்வா கட்டுரையின் உள்ளடக்கங்களை அவர் நீக்கியிருக்கிறார். அதனை மீளமை செய்து இரு கட்டுரைகளின் வரலாறும் காக்கப்படும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:45, 8 மார்ச் 2014 (UTC)
ஐயா, முதற்பக்கக் கட்டுரைகள் இற்றை செய்யப் படவில்லை. கவனிக்கவும்...--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:18, 10 மார்ச் 2014 (UTC)
ஆமாம்--aho;- பேச்சு 11:49, 10 மார்ச் 2014 (UTC)
சிறீதரன் ஐயா இராமதேவ சித்தர் என்ற கட்டுரை ஒரு பொய்யான தகவல்களை ஆவணப்படுத்தும் முயற்சி ( இராமதேவ சித்தர் ) அக்கதை நீக்க வேண்டும் நன்றி----- Mohamed ijazz
நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் மன அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கி வர/ வளர வாழ வாழ்த்துக்கள். -- mohamed ijazz(பேச்சு) 00:25, 29 சூலை 2014 (UTC)
இங்கு கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 2 ஆகத்து 2014 (UTC)
வணக்கம் Kanags:) இந்த பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து தரவும்.
Thilakshan (பேச்சு) 22:28, 2 ஆகஸ்ட் 2014 (UTC)
நன்றி --Kanags \உரையாடுகஅவர்களே! நான் இது பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை. நான் செய்தது மிகப்பெரிய தவறு. தயவு செய்து மன்னித்து விடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன். இனிமேல் இத்தவறு இடம்பெறாமல் பார்த்துக் கொள்கின்றேன். நன்றி --Jey \உரையாடுக
சிறீதரன் ஐயா ஒருவர் பயனர்:Zubair ,பயனர்:Mohamedtet என இரண்டு பயனர் கணக்குகளை வைத்துள்ளார்.-- mohamed ijazz(பேச்சு) 06:59, 17 ஆகத்து 2014 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.