From Wikipedia, the free encyclopedia
அசைவு விபரியல் அல்லது இயங்கியல் (kinematics) என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு பொருட்தொகுதியின் இயக்கத்தை, இயக்கத்துக்கான காரணத்தை நோக்காமல், அதன் நிலை, திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளால் விபரிக்கிறது.[1][2][3]
மரபார்ந்த விசையியல் | ||||||||
வரலாறு · காலக்கோடு
| ||||||||
அசைவு விபரியல் வானியற்பியலில் வான் பொருட்களின் இயக்கத்தை அறியவும், மற்றும் இயந்திரப் பொறியியல், தானியங்கியல், உயிர்விசையியல் ஆகியவற்றில்[4] தொகுதிகளின் அசைவைக் கண்டறியவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, விசைப்பொறிகள், தானியங்கி கைகள், மனித உடம்பின் எலும்புக்கூடு ஆகியவற்றின் அசைவுகளை அறியப் பயன்படுகிறது.
திசைவேகம் (velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தின் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். வேகம் அல்லது கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான திசைவேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
இங்கு ΔP என்பது இடப்பெயர்ச்சியையும் Δt என்பது நேரத்தையும் குறிக்கின்றது.
இது வேகத்தை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.