பகாங் மந்திரி பெசார்
From Wikipedia, the free encyclopedia
பகாங் மந்திரி பெசார் அல்லது பகாங் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Pahang அல்லது First Minister of Pahang; மலாய்: Menteri Besar Pahang; சீனம்: 彭亨州大臣) என்பவர் மலேசிய மாநிலமான பகாங் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைப்பது வழக்கம்.
விரைவான உண்மைகள் பகாங் மந்திரி பெசார் Menteri Besar of Pahang Menteri Besar Pahang, உறுப்பினர் ...
பகாங் மந்திரி பெசார் Menteri Besar of Pahang Menteri Besar Pahang | |
---|---|
![]() | |
![]() | |
உறுப்பினர் | பகாங் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | பகாங் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | தெலுக் சிசேக் சாலை, 25000 குவாந்தான், பகாங் |
அலுவலகம் | விசுமா செரி பகாங், 25502 குவாந்தான், பகாங் |
நியமிப்பவர் | சுல்தான் அப்துல்லா பகாங் சுல்தான் (Sultan Abdullah Pahang) |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | மகமுது மாட் (Mahmud Mat) |
உருவாக்கம் | 1 பெப்ரவரி 1948; 76 ஆண்டுகள் முன்னர் (1948-02-01) |
இணையதளம் | www |
மூடு
பகாங் மந்திரி பெசார், பகாங் மாநில சட்டமன்றத்தின் (Pahang State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது பகாங் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் வான் ரொசிடி வான் இசுமாயில் (Wan Rosdy Wan Ismail). இவர் 22 நவம்பர் 2022 முதல் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசார் (முதல்வர்) பதவியை வகித்து வருகிறார்.[2]