பகாங் சுல்தான்
பகாங் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
பகாங் சுல்தான் (ஆங்கிலம்: Sultan of Pahang; மலாய்: Sultan Pahang Darul Makmur) என்பவர் பகாங் மாநிலத்தின் ஆளும் அரசராகவும், பகாங் மாநிலத்தின் தலைவராகவும், இசுலாமிய மதத்தின் தலைவராகவும் சேவை செய்யும் தலைமை அரச ஆளுநராகும். அந்த வகையில், பகாங் சுல்தான் என்பவர் பகாங் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் பகாங் சுல்தான் Sultan of Pahang Sultan Pahang Darul Makmur کلنتنسلطان ڤهڠ, வாரிசு தெங்கு அசனல் இப்ராகிம் ஆலாம் சா (Tengku Hassanal Ibrahim Alam Shah) ...
பகாங் சுல்தான் Sultan of Pahang Sultan Pahang Darul Makmur کلنتنسلطان ڤهڠ | |
---|---|
மாட்சிமிகு பகாங் சுல்தான் அப்துல்லா | |
வாரிசு தெங்கு அசனல் இப்ராகிம் ஆலாம் சா (Tengku Hassanal Ibrahim Alam Shah) | |
ஆட்சிக்காலம் | பகாங் சுல்தான் பதவியில்: (11 சனவரி 2019 - இன்று வரையில்) |
முடிசூட்டுதல் | 11 சனவரி 2019 |
முன்னையவர் | பகாங் சுல்தான் அகமட் சா (Sultan Ahmad Shah of Pahang) |
பிறப்பு | இயற்பெயர்: Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah 30 சூலை 1959 இசுதானா மங்கா துங்கல், பெக்கான், பகாங், மலாயா (இன்றைய பெக்கான், மலேசியா) |
துணைவர் | துங்கு அமீனா மைமுனா (தி. 1986) ஜூலியா ரைசு (தி. 1991) |
மரபு | ஜொகூர் லாமா பெண்டகாரா (Bendahara Johor Lama) |
தந்தை | பகாங் சுல்தான் அகமட் சா |
தாய் | தெங்கு அம்புவான் அப்சான் |
மூடு
தற்போதைய பகாங் சுல்தான் அப்துல்லா 2019 சனவரி 24-ஆம் தேதி, தன் தந்தைக்குப் பின்னர், பகாங் மாநிலத்தின் சுல்தான் பதவியை ஏற்றார். இவர், பகாங் மாநிலத்தின் 6-ஆவது சுல்தான் ஆவார்.[1]