இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
நிமிசா சஞ்சயன் (Nimisha Sajayan) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் மராத்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[1] ஒரு குப்ரசித்த பையன் மற்றும் சோல திரைப்படங்களில் நடித்ததற்காக 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் பெற்றவர்.
நிமிசா சஞ்சயன் | |
---|---|
பிறப்பு | 1997 மும்பை |
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சயனுக்கும் பிந்து சஞ்சயனுக்கும் நிமிசா மும்பையில் பிறந்தார். இவரது தாயாரின் பூர்வீகம் கொல்லம் மாவட்டத்திலுள்ள புனலூரில் உள்ளது.[2] நிமிசா மும்பையில் உள்ள கார்மல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். மும்பை கே. சே. சோமையா கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3]
திலீசு போத்தன் இயக்கிய தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[4] இதன் பின்பு பி. அசித் குமார் மற்றும் ராசீவ் ரவியின் 'ஈடா' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.[5][6] மதுபால் இயக்கிய ஒரு குப்ரசிதா பையன், சனல் குமார் சசிதரன் இயக்கிய சோல திரைப்படங்களுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான 49வது கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.[7] சோல திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[8]
2021 இல் இவர் தி கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்தார். திரைப்படமும் இவரது நடிப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றது.[9] அதே ஆண்டு, அவர் நயாட்டு, மாலிக் ஆகிய திரைப்படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். 2022 இல் அவர் ஒரு தேக்கன் தள்ளு கேஸ், இன்னாலே வாரே மற்றும் ஹெவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஏ. எல்.விஜய் இயக்கிய மிசன்: அத்தியாயம் 1 திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார், ஆனால் தமிழில் இவரது முதல் திரைப்பட வெளியீடு 2023 இல் வெளியான சித்தா.
ஆண்டு | தலைப்பு | பாத்திரம்(ங்கள்) | மொழி | குறிப்புகள் | மேற். |
---|---|---|---|---|---|
2017 | சி/ஒ சாய்ரா பானு | அங்கீகரிக்கப்படாத பாத்திரம் | மலையாளம் | [10] | |
தொண்டிமுதலும் ட்ரிக்சாச்சியும் | சிறீஜா | [11] | |||
2018 | ஈடா | ஐசுவர்யா | [12] | ||
மாங்கல்யம் தந்துனானென | கிளாரா | [13][14] | |||
ஒரு குபிரசித்த பையன் | ஹன்னா எலிசபெத் | [15][16] | |||
2019 | நல்பதியோன்னு (41) | பாக்யசூயம் | [17] | ||
சோல | சானு | [18] | |||
ஸ்டாண்ட் அப் | கீர்த்தி | [19][20] | |||
2021 | தி கிரேட் இந்தியன் கிச்சன் | மனைவி | [21][22] | ||
ஒன் | லத்திகா | [23] | |||
நாயட்டு | சுனிதா | [24][25] | |||
மாலிக் | ரோசுலைன் | [26] | |||
2022 | இன்னாலே வாரே | அஞ்சலி | [27] | ||
ஹெவன் | பாதுகாப்பு மன்ற உறுப்பினர் | சிறப்பு தோற்றம் | [28] | ||
அவா அவாய் | ஜோதி | மராத்தி | |||
ஒரு தேக்கன் தள்ளு கேஸ் | வசந்தி | மலையாளம் | [29] | ||
2023 | துரமுகம் | உமானி | [30] | ||
புட்பிரின்ட்சு அன் வாட்டர் | மீரா | இந்திய ஆங்கிலம் | [31][32] | ||
சித்தா | சக்தி | தமிழ் | [33] | ||
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் | மலையரசி | [34] | |||
அத்ரிஷ்ய ஜலகங்கள் | மலையாளம் | [35] | |||
2024 | மிசன்: அத்தியாயம் 1 | நான்சி குரியன் | தமிழ் | [36][37] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.