தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
தேனி மக்களவைத் தொகுதி (Theni Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 33-ஆவது தொகுதி ஆகும்.
தேனி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தேனி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009–நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,074,931[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 190. சோழவந்தான் (தனி) 197. உசிலம்பட்டி 198. ஆண்டிப்பட்டி 199. பெரியகுளம் (தனி) 200. போடிநாயக்கனூர் 201. கம்பம் |
2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்பில், தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதி என்பது தேனி (சட்டமன்றத் தொகுதி), பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி), போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 5 தேனி மாவட்டத்துத் தொகுதிகளையும், சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) எனும் மதுரை மாவட்டத் தொகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது. இவற்றுள் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொகுதிச்சீரமைப்பில் சேடபட்டித் தொகுதியானது உசிலம்பட்டித் தொகுதியோடு இணைக்கப்பட்டது; தேனித்தொகுதியின் ஒருபகுதி போடித் தொகுதியோடும் இன்னொரு பகுதி கம்பம் தொகுதியோடும் இணைக்கப்பட்டுவிட்டன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
தொகுதி எண் | தொகுதி | ஒதுக்கீடு | மாவட்டம் |
---|---|---|---|
190 | சோழவந்தான் | பட்டியலினத்தவர் | மதுரை |
197 | உசிலம்பட்டி | பொது | மதுரை |
198 | ஆண்டிப்பட்டி | பொது | தேனி |
199 | பெரியகுளம் | பட்டியலினத்தவர் | தேனி |
200 | போடிநாயக்கனூர் | பொது | தேனி |
201 | கம்பம் | பொது | தேனி |
வ. எண் | பெயர் | பதவிக் காலம் | மக்களவைத் (தேர்தல்) |
Political party | ||
---|---|---|---|---|---|---|
துவக்கம் | முடிவு | |||||
1 | ஜே. எம். ஆரூண்ரஷீத் | 1 சூன் 2009 | 18 மே 2014 | 15வது (2009) |
இதேகா | |
2 | இரா. பார்த்தீபன் | 4 சூன் 2014 | 24 மே 2019 | 16வது (2014) |
அஇஅதிமுக | |
3 | இரவீந்திரநாத் குமார் | 18 சூன் 2019 | 14 சூலை 2022 | 17வது (2019) | ||
15 சூலை 2022 | 05 சூன் 2024 | சுயேச்சை | ||||
4 | தங்க தமிழ்ச்செல்வன் | 05 சூன் 2024 | முடியவில்லை | 18வது (2024) |
திமுக |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | தங்க தமிழ்ச்செல்வன் | 5,71,493 | 50.08 | N/A | |
அமமுக | டி. டி. வி. தினகரன் | 292,668 | 25.65 | 13.39 | |
அஇஅதிமுக | வி. டி. நாராயணசாமி | 155,587 | 13.63 | ▼29.33 | |
நாதக | ஜே. மதன் | 76,834 | 6.73 | 4.36 | |
நோட்டா | நோட்டா | 11,336 | 0.99 | 0.08 | |
வெற்றி விளிம்பு | 2,78,825 | 24.43 | 17.86 | ||
பதிவான வாக்குகள் | 11,41,219 | ||||
திமுக gain from [[அதிமுக|]] | மாற்றம் |
இத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் குமார், காங்கிரசு வேட்பாளரான ஈ. வெ. கி. ச. இளங்கோவன், 76,693 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
இரவீந்திரநாத் குமார் | அஇஅதிமுக | 1,354 | 5,04,813 | 43.02% | |
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் | காங்கிரசு | 2,335 | 4,28,120 | 36.48% | |
தங்க தமிழ்ச்செல்வன் | அமமுக | 877 | 1,44,050 | 12.28% | |
ஷாகுல் ஹமீத் | நாம் தமிழர் கட்சி | 426 | 27,864 | 2.37% | |
எஸ். இராதாகிருஷ்ணன் | மக்கள் நீதி மய்யம் | 171 | 16,879 | 1.44% | |
நோட்டா | - | - | 133 | 10,686 | 0.91% |
2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
இரா. பார்த்தீபன் | அஇஅதிமுக | 5,71,254 |
பொன். முத்துராமலிங்கம் | திமுக | 2,56,722 |
அழகுசுந்தரம் | மதிமுக | 1,34,362 |
ஜே. எம். ஆரூண்ரஷீத் | காங்கிரசு | 71,432 |
22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ஆரூண் ரசீத், அஇஅதிமுகவின் தங்க தமிழ்செல்வனை, 6,302 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, தேனி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஜே. எம். ஆரூண்ரஷீத் | காங்கிரசு | 3,40,575 |
தங்க தமிழ்ச்செல்வன் | அஇஅதிமுக | 3,34,273 |
சந்தானம் | தேமுதிக | 70,908 |
பார்வதி | பாரதிய ஜனதா கட்சி | 7,640 |
கவிதா | பகுஜன் சமாஜ் கட்சி | 8,023 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.