![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Bandar_Tropicana_Aman_05.jpg/640px-Bandar_Tropicana_Aman_05.jpg&w=640&q=50)
தெலுக் பாங்லிமா காராங்
From Wikipedia, the free encyclopedia
தெலுக் பாங்லிமா காராங் (மலாய்: Telok Panglima Garang; ஆங்கிலம்: Telok Panglima Garang; சீனம்: 直落邦里玛嘉朗) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா லங்காட் மாவட்டத்தில் (Kuala Langat District) உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும்.
விரைவான உண்மைகள் தெலுக் பாங்லிமா காராங்Telok Panglima Garang, நாடு ...
தெலுக் பாங்லிமா காராங் Telok Panglima Garang | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 3°46′12″N 100°58′48″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | கோலா லங்காட் மாவட்டம் |
நிர்வாக மையம் | பந்திங் |
அரசு | |
• ஊராட்சி | கோலா லங்காட் ஊராட்சி (Kuala Langat District Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே +8 |
அஞ்சல் குறியீடு | 42600 |
தொலைபேசி எண்கள் | ++60-3-3122 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
மூடு
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து மேற்கே 47 கி.மீ.; கிள்ளான் நகரில் இருந்து தெற்கே 16 கி.மீ.; பந்திங் நகரில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தீர்வையற்ற வணிக மண்டலம் (Free Trade Zone) உள்ளது.
மலாக்கா நீரிணையை எதிர்கொள்ளும் கேரி தீவு மற்றும் இண்டா தீவு போன்ற கடலோரத் தீவுகளுக்கு அருகில் அமைந்து இருக்கிறது. ஆகவே இந்த நகரும் ஒரு கடலோர நகரமாகவே கருதப் படுகிறது.[1]