தெமர்லோ நகரம்
மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
(இது தெமர்லோ நகரம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ மாவட்டம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ மாவட்டம் என்பதைச் சொடுக்கவும்.)
தெமர்லோ | |
---|---|
Temerloh | |
பகாங் | |
ஆள்கூறுகள்: 3°27′N 102°25′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
மாவட்டம் | தெமர்லோ |
அமைவு | 1889 |
நகராண்மைக் கழகத் தகுதி | 15 சனவரி 1997[1] |
தொகுதி | தெமர்லோ |
உள்ளூராட்சி | தெமர்லோ நகராண்மைக் கழகம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | பாட்சி கெனாலி[2] |
• நகராண்மைக் கழகத் தலைவர் | செசிலி ஜமாலுதின்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,251 km2 (869 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,58,724 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 28xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
தெமர்லோ (ஆங்கிலம்: Temerloh; மலாய்: Temerloh; சீனம்: 淡马鲁; ஜாவி: تمرلوه); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். தெமர்லோ மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
மலேசியாவில் மிகப் பழைமையான நகரங்களில் தெமர்லோ நகரமும் ஒன்றாகும். 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சில காலனித்துவ கட்டிடங்களும்; கடை வீடுகளும் இன்றும் பழைய வர்லாற்றைப் பறைசாற்றுகின்றன.
தெமர்லோ நகர தீபகற்ப மலேசியாவின் மையம் (ஆங்கிலம்: Centre of Peninsular Malaysia; மலாய்: Titik Tengah Semenanjung Malaysia) என நிரூபிக்கப்பட்டு உள்ளது. லஞ்சாங் கம்போங் பாயா சிப்புட் எனும் இடத்தில் அந்த மையப்புள்ளி அமைந்து உள்ளது.[5]
கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் - கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் ஏறக்குறைய 130 கி.மீ. (81 மைல்) தொலைவில் தெமர்லோ நகரம் அமைந்துள்ளது. குவாந்தான் நகருக்கு அடுத்தபடியாக பகாங் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது.