ஆசியாவின் தென்கிழக்குப் புவியியற் பகுதி From Wikipedia, the free encyclopedia
தென்கிழக்கு ஆசியா என்பது ஆசியா கண்டத்தில் இந்தியாவுக்கு கிழக்கிலும், சீனாவுக்கு தெற்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கிலும் அமைந்த நாடுகளை குறிக்கும். ஆசியா கண்டத்தை சேர்ந்த நாடுகள் மற்றும் அதற்கு கிழக்கிலும் தென்கிழக்கிலும் அமைந்த தீவுகள் ஆகிய இரண்டு மண்டலங்களில் பொதுவாக இப்பகுதி பிரிந்திருக்கிறது.
தென்கிழக்காசியா | |
---|---|
பரப்பளவு | 5,000,000 km2 (1,900,000 sq mi) |
சனத்தொகை | 610,000,000 |
சனத்தொகை அடர்த்தி | 118.6/km2 (307/sq mi) |
நாடுகள் | |
பிரதேசங்கள் | 4+2
|
GDP (2011) | $2.158 trillion (நாணய மாற்று வீதம்) |
GDP per capita (2011) | $3,538 (நாணய மாற்று வீதம்) |
மொழிகள் |
|
நேர வலயங்கள் | ஒ.ச.நே + 05:30 (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) தொடக்கம் ஒ.ச.நே + 09:00 (இந்தோனேசியா) வரை |
தலைநகரங்கள் | |
மிகப் பெரிய நகரங்கள் |
மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கண்டத்தை சேர்ந்த நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தை சேர்ந்த தாய் பேரின மக்கள் மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் வசிக்கின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், புரூனை, கிழக்குத் திமோர் ஆகியோரும் தென்கிழக்கு ஆசியாவில் கடல் மண்டல நாடுகள். இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த ஆஸ்திரோனேசிய மக்கள் வசிக்கின்றனர்.
தமிழ் நாட்டினருக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, சமசுகிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவப் பேரரசு வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்காசிய நாடுகளில் இந்துப் பேரரசு கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக்களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற பேரரசுகள்வரலாற்றில் பேசப்பட்டிருக்கமாட்டாது.
2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் நீதி நூல்களைப் பின்பற்றியே ஆட்சி செய்து வந்துள்ளன.
கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்) சோழப் பேரரசில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.
சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றைய காலகட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும்மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 30 குட்டி அரசுகள், சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்துப் பேரரசுகளான ‘அங்கோர் வாட்’ பேரரசும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.
7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து, 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்துப் பேரரசு தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் பேரரசும் வடக்கு சுமத்திரா முனையிலிருந்து, மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழப் பேரரசின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, கடாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.
கடாரத்தின் மீது படையெடுத்த சோழப் பேர ரசிடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன.மரக்கலங்களுக்கு பொறுப்பெற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.
நாடு | பரப்பளவு (km2) | சனத்தொகை(2011) | சனத்தொகை அடர்த்தி (/km2) | வருடாந்த அரச வருமானம், USD (2011) |
வருடாந்த தனிநபர் வருமானம், USD (2011) | மனித வளர்ச்சிச் சுட்டெண் | தலைநகரம் |
---|---|---|---|---|---|---|---|
புரூணை | 5,765 | 425,890 | 74 | 15,533,000,000 | $36,584 | 0.838 | பண்டர் செரி பெகவன் |
மியான்மர் | 676,578 | 62,417,000 | 92 | 51,925,000,000 | $832 | 0.483 | நைப்பியிதோ |
கம்போடியா | 181,035 | 15,103,000 | 84 | 12,861,000,000 | $852 | 0.523 | புனோம் பென் |
கிழக்குத் திமோர் | 14,874 | 1,093,000 | 74 | 4,315,000,000 | $3,949 | 0.495 | டிலி |
இந்தோனேசியா | 1,904,569 | 241,030,522 | 127 | 845,680,000,000 | $3,509 | 0.617 | ஜகார்த்தா |
லாவோஸ் | 236,800 | 6,556,000 | 28 | 7,891,000,000 | $1,204 | 0.524 | வியஞ்சான் |
மலேசியா | 329,847 | 28,731,000 | 87 | 278,680,000,000 | $10,466 | 0.761 | கோலாலம்பூர் |
பிலிப்பீன்சு | 300,000 | 95,856,000 | 320 | 213,129,000,000 | $2,223 | 0.644 | மனிலா |
சிங்கப்பூர் | 724 | 5,274,700 | 7,285 | 259,849,000,000 | $49,271 | 0.866 | சிங்கப்பூர் |
தாய்லாந்து | 513,120 | 64,076,000 | 125 | 345,649,000,000 | $5,394 | 0.682 | பேங்காக் |
வியட்நாம் | 331,210 | 89,316,000 | 270 | 122,722,000,000 | $1,374 | 0.593 | ஹனோய் |
பிரதேசம் | பரப்பளவு (km2) | சனத்தொகை | சனத்தொகை அடர்த்தி (/km2) |
---|---|---|---|
கிறிசுத்துமசு தீவுகள் | 135 | 1,402 | 10.4 |
கொக்கோசு (கீலிங்) தீவுகள் | 14 | 596 | 42.6 |
ஆங்காங் | 1,104 | 7,061,200 | 6,480 |
மக்காவு | 29.5 | 568,700 | 18,568 |
பிரதேசம் | பரப்பளவு (km2) | சனத்தொகை | சனத்தொகை அடர்த்தி (/km2) |
---|---|---|---|
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் | 8,250 | 379,944 | 46 |
ஹைனான் | 33,920 | 8,671,518 | 254.7 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.