நைப்பியிதோ
மியான்மரின் தலைநகர் From Wikipedia, the free encyclopedia
நைப்பியிதோ (Naypyidaw), என்பது மியான்மர் ஒன்றியக் குடியரசின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின்படி, இது நைப்பியிதோ ஒன்றிய மண்டலம் என்ற பெரும்பகுதிக்கு உட்பட்டதாகும். 2005 நவம்பர் 6 ஆம் திகதி மியான்மர் நாட்டின் நிருவாகத் தலைநகரம், முன்னைய தலைநகரமான யங்கோனுக்கு வடக்கே கிட்டத்தட்ட 320 கிமீ தொலைவில் உள்ள பியின்மனா என்ற இடத்திற்கு மேற்கே 3.2 கிமீ தொலைவில் அமைந்த பசுமையான நிலப் பகுதிக்கு அலுவல்முறையாக மாற்றப்பட்டது. இப்புதிய தலைநகரத்தின் அலுவல்முறைப் பெயர் மியான்மர் நாட்டின் வன்கருவிப் படைகள் நாளான 2006 மார்ச்சு 27 அன்று அறிவிக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட இவ்வூரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை 2012 அளவில் நிறைவுறுமென எதிர்பார்க்கப்படுகிறது.[5] 2009 இல் இவ்வூரின் மொத்த மக்கட்டொகை 925,000 ஆக இருந்தது. அதன் காரணமாக இவ்வூர் யங்கோன் மற்றும் மண்டலை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மியான்மரின் மூன்றாவது பெரிய ஊராகத் திகழ்கின்றது.
நைப்பியிதோ
Naypyidaw | |
---|---|
தலைநகரம் | |
நாடு | மியான்மர் |
பிரிவு | ஒன்றியப் பிராந்தியம் |
துணைப்பிரிவுகள் | 8 நகரமைப்புக்கள் |
குடியிருப்பு | 2005 |
ஒன்றிணைக்கப்பட்டது | 2008 |
அரசு | |
• தலைவர் | தளபதி தெயின் ஞுன்ற் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,723.71 sq mi (7,054.37 km2) |
மக்கள்தொகை (2009)[3] | |
• மொத்தம் | 9,25,000 |
• அடர்த்தி | 340/sq mi (130/km2) |
[4] | |
நேர வலயம் | [[ஒசநே+06:30]] (மிநிநே) |
இடக் குறியீடு | 067 |
மேற்கோள்கள்
வெளித் தொடுப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.