![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Emblem_of_Iran.svg/langta-640px-Emblem_of_Iran.svg.png&w=640&q=50)
தெகெசுதன், ஈரான்
From Wikipedia, the free encyclopedia
தெகெசுதன் (Dehestān, பாரசீக மொழி: دهستان) என்பது ஈரானின் ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். பொதுவாக இவை அனைத்தும் மக்கள் வாழிடங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இதனைத் தமிழில்,ஓரளவு பொருள் தரக்கூடிய ஊரக வட்டம் எனலாம். இது சிற்றூர் அல்லது ஊர் அல்லது ஊரகம் என அழைக்கப்படுபவைகளின் தொகுதி ஆகும். இந்த வட்டத்திற்குள், பல மக்கள் வாழிடங்கள் அடங்கியிருக்கும். குறைந்த மக்கள் தொகை வாழும் நிலப்பகுதிகளுக்கு மேலேயும், பாக்ச்சு என்ற மாவட்ட நிலப்பகுதிக்கு கீழும் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும். 2006 ஆம் ஆண்டு எடுத்தப் புள்ளிவிவரப்படி, ஈரானில் 2,400 தெகெசுதன்கள் இருந்தன.[1] [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4e/Emblem_of_Iran.svg/320px-Emblem_of_Iran.svg.png)