![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/Dehiwala_Zoo_Museum.jpg/640px-Dehiwala_Zoo_Museum.jpg&w=640&q=50)
தெகிவளை விலங்கியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
தெகிவளை விலங்கியல் பூங்கா கொழும்பு நகரின் புறநகர்ப் பகுதியான தெகிவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த விலங்கியல் பூங்கா தேசிய விலங்கியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகின்றது. 1936 ஆம் ஆண்டு இந்த விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நிலவரப்படி பூங்காவில் 3000 விலங்குகளும், 350 இனங்களும் காணப்படுகின்றது. அத்துடன் பூங்காவின் ஆண்டு வருமானம் சுமார் நாற்பது மில்லியன் இலங்கை ரூபாய்களாகும்.
விரைவான உண்மைகள் தெகிவளை விலங்கியல் பூங்கா, திறக்கப்பட்ட தேதி ...
தெகிவளை விலங்கியல் பூங்கா | |
---|---|
![]() தெகிவளை விலங்கியல் அருங்காட்சியகம் | |
![]() | |
6°51′24.5″N 79°52′22.4″E | |
திறக்கப்பட்ட தேதி | 1936 |
அமைவிடம் | தெகிவளை, கொழும்பு |
நிலப்பரப்பளவு | 10.1 ha / 0.10 km2 |
விலங்குகளின் எண்ணிக்கை | 3000 (2005)[1] |
உயிரினங்களின் எண்ணிக்கை | 310 (2013)[2] |
ஆண்டு பார்வையாளர்கள் | ~1.5 million (2008)[3] |
உறுப்புத்துவங்கள் | விலங்கியல் நீர்வாழ் காட்சிசாலையின் உலக சங்கம் (WAZA) |
முக்கிய கண்காட்சிகள் | பாலூட்டிகள், ஊர்வன, நீர்வாழ் விலங்குகள், பறவைகள் |
வலைத்தளம் | nationalzoo.gov.lk |
மூடு
இந்த விலங்கியல் பூங்கா ஏனைய விலங்கியல் பூங்காக்களுடன் விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்காக விலங்குகளைப் பரிமாறிக்கொள்வதுண்டு.