![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/58/Thindal_Murugan_Temple.jpg/640px-Thindal_Murugan_Temple.jpg&w=640&q=50)
திண்டல் முருகன் கோயில்
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
திண்டல் முருகன் கோயில் (Thindalmalai Murugan Temple) என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் ஒரு முருகன் கோயில் ஆகும். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
விரைவான உண்மைகள் திண்டல் முருகன் கோவில், ஆள்கூறுகள்: ...
திண்டல் முருகன் கோவில் | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: | 11.3197°N 77.6760°E / 11.3197; 77.6760 |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில், திண்டல் மலை |
பெயர்: | திண்டல் முருகன் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவு: | திண்டல், ஈரோடு |
ஏற்றம்: | 260 m (853 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேலாயுத சுவாமி, முருகன் |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விழா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
மூடு
கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கந்தசஷ்டி விழா இங்குச் சிறப்பாக நடைபெறும்.