தம்புள்ளை
இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் / From Wikipedia, the free encyclopedia
தம்புள்ளை ('Dambulla, சிங்களம்: දඹුල්ල) மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். இது கொழும்பில் இருந்து வீதிவழியாக 148 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டியில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முதன்மையான சந்தியில் அமைந்துள்ள இதன் அமைவிடம் காரணமாக இலங்கையின் மரக்கறி விநியோகத்தில் தம்புள்ள முக்கிய இடம் வகிக்கின்றது.
விரைவான உண்மைகள் தம்புள்ளை, நாடு ...
தம்புள்ளை | |
---|---|
ஆள்கூறுகள்: 7°51′28″N 80°39′09″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | மாத்தளை |
அரசு | |
• வகை | மாநகர சபை |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 58.25 km2 (22.49 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• அடர்த்தி | 429/km2 (1,110/sq mi) |
• நகர்ப்புறம் | 24,967 (மாநகரப் பகுதி) |
• பெருநகர் | 75,808 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
மூடு
இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக தம்புள்ளை பொற்கோயில் அமைந்துள்ளது. இங்கு 167 நாட்களில் உருவாக்கப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கும் தெற்காசியாவில் பேரு வீச்சில் காணப்படுவதான இளஞ்சிவப்பு படிகக் கற்களால் ஆன மலைகள், நா மரக் காடுகள் என்பன இங்கு முக்கியத்துவமானவை.