From Wikipedia, the free encyclopedia
டேலி தாம்சன் (Daley Thompson) என்று அழைக்கப்படும் பிரான்சிஸ் மோர்கன் அயோடலே தாம்சன், (பிறப்பு: 1958 சூலை 30 [2] ) இவர் ஓர் ஆங்கில முன்னாள் டெகத்லான் வீரராவார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் டெகத்லானில் தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் இந்த நிகழ்விற்கான உலக சாதனையை நான்கு முறை முறியடித்தார் .
2007இல் தாம்சன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | பிரித்தானியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 சூலை 1958[1] நாட்டிங் ஹில், இலண்டன், ஐக்கிய ராச்சியம்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | டெகத்லான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கழகம் | எசெக்ஸ் பீகில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | டெகத்லான் 8,847 புள்ளிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
நான்கு உலக சாதனைகள், இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், மூன்று பொதுநலவாய விளையாட்டுப் பட்டங்கள், உலகப் போட்டிகள், ஐரோப்பியப் போட்டிகள போன்றவற்றில் வெற்றி பெற்ற இவர், எல்லா காலத்திலும் மிகப் பெரிய டெகத்லான்களில் ஒருவராக கருதப்படுகிறார். [3]
இவர், லண்டனின் நாட்டிங் ஹில்லில் ஒரு பிரிட்டிசு நைஜீரிய தந்தையின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இலண்டனில் ஒரு வாடகை வாகன நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது தாய் இலிடியா இசுக்கொட்லாந்தைச் சேர்ந்தவராவார். [3] இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, இவரது தந்தை இவர்களின் குடும்பத்தைவிட்டு வெளியேறினார். ஏழு வயதில், இவரது தாய் இவரை சசெக்ஸின் போல்னியில் உள்ள பார்லி குளோஸ் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பினார். இவரது முதல் லட்சியம் ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக மாற வேண்டும் என்பதேயாகும். ஆனால் பின்னர் இவர் தனது ஆர்வங்களை தடகளத்திற்கு மாற்றிக் கொண்டார்.
ஆரம்பத்தில், இவர் ஹேவர்ட்ஸ் ஹீத் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். ஆனால் இவர் 1975 இல் இலண்டனுக்குத் திரும்பியபோது, நியூஹாம், எசெக்ஸ் பீகிள்ஸ் போன்ற தடகள சங்கத்தில் சேர்ந்து, ஒரு விரைவோட்ட வீரராகப் பயிற்சி பெற்றார். இவருக்கு பாப் மோர்டிமர் என்பவர் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அவர் இவரை டெகத்லானுக்கு முயற்சி செய்ய பரிந்துரைத்தார். இவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் வேல்சின் கும்பிரான் என்ற நகரத்தில் தனது முதல் டெகத்லானில் போட்டியிட்டார். இவர் தனது அடுத்த போட்டியில் வென்றார். 1976 ஆம் ஆண்டில், மாண்ட்ரீல் ஒலிம்பிக் போட்டிகளில் 18 வது இடத்தில் இருந்தார். அடுத்த ஆண்டு, இவர் ஐரோப்பிய இளையோர் பட்டத்தை வென்றார். 1978 இல் இவரது மூன்று பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்தார். 1979 ஆம் ஆண்டில், இவர் அந்த ஆண்டின் டெகத்லானை முடிக்கத் தவறிவிட்டார். ஆனால் இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வென்றார்.
இவருக்கு லிசா என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும், முன்னாள் மனைவி திரிசுடன் மூன்று குழந்தைகளும் உள்ளனர். [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.