டி. இமான்
இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
டி. இமான் (D. Imman) ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.
விரைவான உண்மைகள் டி. இமான், பின்னணித் தகவல்கள் ...
டி. இமான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டி.இம்மானுவேல் வசந்த் தினகரன்[1] |
பிறப்பு | 24 சனவரி 1983 (1983-01-24) (அகவை 41) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்படம் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 2002-நடப்பு |
மூடு
இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.