![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Jason_Momoa_%252843055621224%2529_%2528cropped%2529.jpg/640px-Jason_Momoa_%252843055621224%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜேசன் மோமோவா
அமெரிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர். / From Wikipedia, the free encyclopedia
ஜோசப் ஜேசன் நமக்கீஹா மோமோவா (ஆங்கில மொழி: Joseph Jason Namakaeha Momoa) (பிறப்பு: ஆகத்து 1, 1979) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் இராணுவ அறிவியல் தொடரான 'இசுடார்கேட் அட்லாண்டிசு' (2004-2009) என்ற தொடரில் 'ரோனன் டெக்ஸ்' என்ற கதாப்பாத்திரத்திலும் எச்பிஓ கற்பனைத் தொடரான கேம் ஆஃப் துரோன்சு (2011-2012) என்ற தொடரில் 'கல் ட்ரோகோ' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
ஜேசன் மோமோவா | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜோசப் ஜேசன் நமக்கேஹா மோமோஆ ஆகத்து 1, 1979 (1979-08-01) (அகவை 44) ஹொனலுலு, அவாய், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | லிசா போனெட் (2017-2022) |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
jasonmomoa |
இவர் வாள் மற்றும் மாயாசாலப் படமான 'கோனான் தி பார்பேரியன்' என்ற படத்தில் நடித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் அக்வாமேனை சித்தரித்து வெளியான ஜஸ்டிஸ் லீக் (2017), அக்வாமேன் (2018),[1][2][3] சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) அக்வாமேன் அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார்.