சோத்பூர்
இராசத்தானிலுள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
சோத்பூர் அல்லது ஜோத்பூர் (Jodhpur, ஒலிப்புⓘ என்பது இந்திய மாநிலமான இராசத்தானின் இரண்டாவது பெரிய நகரமும், அதிகாரப்பூர்வமாக மாநிலத்தின் இரண்டாவது பெருநகரமும் ஆகும். இது முன்னர் ஜோத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடமாக இருந்தது. சோத்பூர் வரலாற்று ரீதியாக இப்போது ராஜஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் மார்வார் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. சோத்பூர் ஒரு பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு பல அரண்மனைகள், கோட்டைகள், கோயில்கள், தார் பாலைவனத்தின் பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது இராசத்தான் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் "நீல நகரம்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது சோத்பூர் மாவட்டம் மற்றும் சோத்பூர் கோட்டத்தின் நிர்வாக தலைமையகமாகவும் இந்நகரம் செயல்படுகிறது.
சோத்பூர் | |
---|---|
அடைபெயர்(கள்): நீல நகரம்[1] | |
ஆள்கூறுகள்: 26.28°N 73.02°E / 26.28; 73.02 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
கோட்டம் | ஜோத்பூர் |
மாவட்டம் | ஜோத்பூர்[2] |
Settled | 1459 |
தோற்றுவித்தவர் | மான்டோரின் ஜோதா |
பெயர்ச்சூட்டு | மான்டோரின் ஜோதா |
அரசு | |
• வகை | மாநகர மன்றம் |
• நிர்வாகம் | சோத்மூர் மாநகர மன்றம் |
• மேயர், மாநகர மன்றம் | குந்தி தியோரா பரிஹார் (ஜோத்பூர் வடக்கு) Vanita Seth (Jodhpur South) |
• ஆட்சியர் | ஹிமான்ஷு குப்தா, இஆப |
• ஜோத்பூர் காவல் ஆணையர் | ஜோஸ் மோகன், இகாப[3] |
பரப்பளவு | |
• பெருநகரம் | 233.5 km2 (90.2 sq mi) |
• மாநகரம் | 4,467.3 km2 (1,724.8 sq mi) |
ஏற்றம் | 231 m (758 ft) |
மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)[6] | |
• பெருநகரம் | 10,56,191 |
• தரவரிசை | 43வது |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 23,30,000[8][9][10] |
இனங்கள் | Jodhpuri, Marwari |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | இந்தி, ஆங்கிலம் |
• பூர்வீக மொழி | மார்வாரி, இராச்சசுத்தானி, சிந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 342001 |
தொலைபேசி குறியீடு | 0291 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-19 |
இணையதளம் | jodhpur |
சோத்பூரின் பழைய நகரம் மெக்ரான்கர் கோட்டையால் சூழப்பட்டதாகவும், மதிலால் சூழப்படதாகவும், பல வாயில்கள் கொண்டதாவும் உள்ளது. [11] கடந்த பல தசாப்தங்களாக, நகரம் மதில் சுவருக்கு வெளியே பெரிதும் விரிவடைந்துள்ளது. சோத்பூர் இராசத்தான் மாநிலத்தில் புவியியல் ரீதியாக மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியில் பயணத்துக்கு ஏற்ற வசதியான தளமாக உள்ளது. த நியூயார்க் டைம்சின் "2020 இல் செல்ல வேண்டிய 52 இடங்கள்" இல் இந்த நகரம் இடம்பெற்றது. [12]
இந்த நகரில் பல கல்வி நிறுவனங்களின் இருப்பிடமாக உள்ளது. அதில் மிக முக்கியமானவை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜோத்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஜோத்பூர், டாக்டர் சம்பூர்ணானந்த் மருத்துவக் கல்லூரி, டிஎஸ்ஆர்ஆர்யு ஜோத்பூர், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களான இந்திய விண்வெளி ஆய்வு மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம், வறண்ட வன ஆய்வு நிறுவனம், பாலைவன மருத்துவ ஆராய்ச்சி மையம் போன்றவை இந்த நகரத்தில் அமைந்துள்ளன.