சி (நிரலாக்க மொழி)
From Wikipedia, the free encyclopedia
சி நிரலாக்க மொழி ('C' Computer Programming Language) என்பது கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு கணிமொழி. இது 1970 இல் அமெரிக்காவின் AT&T (அமெரிக்கத் தொலைத்தொடர்பு தொலைபேசி) ஆய்வுக்கூடத்தின் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் நிரலாக்கக் கருத்தோட்டம்:, தோன்றிய ஆண்டு: ...
நிரலாக்கக் கருத்தோட்டம்: | Imperative (procedural), structured |
---|---|
தோன்றிய ஆண்டு: | 1999 |
வடிவமைப்பாளர்: | தென்னிசு இரிட்சி |
வளர்த்தெடுப்பாளர்: | தென்னிசு இரிட்சி & பெல் ஆய்வுக்கூடங்கள் (creators); ANSI X3J11 (ANSI C); ISO/IEC JTC1/SC22/WG14 (ISO C) |
இயல்பு முறை: | Static, weak, manifest, nominal |
முதன்மைப் பயனாக்கங்கள்: | Clang, GCC, Intel C, விசுவல் சி ++, Pelles C, Watcom C |
மொழி வழக்குகள்: | சைக்ளோன்(Cyclone), Unified Parallel C, Split-C, Cilk, C* |
பிறமொழித்தாக்கங்கள்: | B (BCPL, CPL), ALGOL 68, Assembly, PL/I, போர்ட்ரான் |
கோப்பு நீட்சி: | .h .c |
இம்மொழித்தாக்கங்கள்: | Numerous: AMPL, AWK, csh, சி++, சி--(C--), சி#(C#), ஒப்செக்டிவ் சி, பிட்சி(BitC), D, கோ(Go), ஜாவா, யாவாக்கிறிட்டு(JavaScript), Limbo, LPC, பெர்ள், பி.எச்.பி, Pike, Processing, Seed7 |
இயக்குதளம்: | Cross-platform (multi-platform) |
விக்கிநூல்களில் C Programming |
மூடு
தொடக்கத்தில் 1970இல் யுனிக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே சி-மொழி இயங்கியது. பின்னர் ஏனைய இயங்குதளங்களிலும் இயக்கும் வசதியேற்பட்ட பின்னர் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழியாக மாறியது. புதிதாகக் கணினி பயில்பவர்களுக்கு ஏற்ற மொழியாக இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் கணினி இயங்குதளங்களை உருவாக்கவும் வேறு பயனுள்ள மென்பொருள்கள் உருவாக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.