சில்லாங்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சில்லாங் (Shillong) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் தலைநகரமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது ஒரு மலை வாழிட நகரம் ஆகும். மேலும் இது கிழக்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இந்நகரத்தை கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைப்பர். [3]
சில்லாங் | |
---|---|
மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | |
அடைபெயர்(கள்): கிழக்கின் ஸ்காட்லாந்து | |
ஆள்கூறுகள்: 25.5667°N 91.8833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | கிழக்கு காசி மலை |
பெயர்ச்சூட்டு | தேவதை |
அரசு | |
• நிர்வாகம் | சில்லாங் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | 64.36 km2 (24.85 sq mi) |
ஏற்றம் | 1,495−1,965 m (4,908−6,449 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் | 1,43,229 |
• அடர்த்தி | 234/km2 (610/sq mi) |
• பெருநகர் | 3,54,759 |
மொழி | |
• அலுவல் மொழி | ஆங்கிலம்[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 793 001 – 793 102 |
தொலைபேசி குறியீடு | 0364 |
வாகனப் பதிவு | ML-05 |
தட்ப வெப்பம் | Oceanic climate#Subtropical highland variety (Cwb) |
இணையதளம் | eastkhasihills |
இந்நகரம் பிரம்மபுத்திரா ஆறு மற்றும் சுர்மா ஆறுகளிடையே அமைந்துள்ளது. இதன் தட்ப வெப்பம் ஆண்டு முழுமைக்கும் குளிராகவே இருக்கும். [4]
பிரித்தானிய இந்தியாவில் அசாம் மாகாணத்தின் தலைநகராக சில்லாங் இருந்தது. பின்னர் 1972-இல் அசாம் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு மேகாலயா மாநிலம் உருவான போது, சில்லாங் நகரம் மேகாலாயாவின் தலைநகராக விளங்கியது.
சில்லாங் நகரம் 25.57°N 91.88°E பாகையில் அமைந்துள்ளது. இது சில்லாங் பீடபூமியில் அமைந்துள்ளது.[5] இந்நகரத்த்தைச் சுற்றிலும் மூன்று மலைகளால் சூழப்பபெற்றது. சில்லாங் நகரம் கவுகாத்தியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 40 வழியாக 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நகரத்தின் கோடைக்கால வெப்பம் 23 °C (73 °F) மற்றும் குளிர்கால வெப்பம் 4 °C (39 °F) ஆகும். சூன் முதல் அக்டோபர் வரை மழைக் காலம் ஆகும்.
தட்பவெப்பநிலை வரைபடம் சில்லாங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
13.7
15
4
|
22.7
17
6
|
53.7
21
11
|
130.1
23
14
|
273.7
24
15
|
468.8
24
17
|
394.5
24
18
|
317.5
24
18
|
293.8
23
17
|
192.4
22
13
|
37.3
19
9
|
9.3
16
5
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Weather Information Service | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 31,025 வீடுகள் கொண்ட சில்லாங் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,43,229 ஆகும். அதில் ஆண்கள் 70,135 மற்றும் பெண்கள் 73,094 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 14,317. சராசரி எழுத்தறிவு 83.5% ஆகும். இந்நகரத்தின் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,551 மற்றும் 73,307 ஆகவுள்ளனர்.[1] இந்நகர மக்களின் கிறித்தவர்கள் 46.5%, இந்துக்கள் 42.1%, இசுலாமியர்கள் 4.5% மற்றவர்கள் 6.9% ஆகவுள்ளனர். இந்நகரத்தில் பல உள்ளூர் மொழிகள் பேசினாலும் ஆட்சி மொழி, கல்வி மொழி ஆங்கிலம் ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.