From Wikipedia, the free encyclopedia
சிலி தேசிய கால்பந்து அணி (Chilean national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சிலி நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, 1895-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சிலி கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இதுவரை எட்டு உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 1962 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தியபோது, மூன்றாம் இடத்தை வென்றனர்; அதுவே, இவர்களின் அதிகபட்ச உலகக்கோப்பை வெற்றிமுடிவாகும். எக்குவடோர் அணியை அக்டோபர் 15, 2013, அன்று வென்றபோது 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.[3] 1960-களின் இடைப்பகுதியிலிருந்து எலோ தரவுகோள் முறையில் எப்போதும் 25 வலுவான காற்பந்து அணிகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
அடைபெயர் | La Roja (The Red One) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Federación de Fútbol de Chile (FFC) | ||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | ||
தலைமைப் பயிற்சியாளர் | Jorge Sampaoli | ||
அணித் தலைவர் | Claudio Bravo | ||
Most caps | Leonel Sánchez (84) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Marcelo Salas (37) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Estadio Nacional Estadio Monumental David Arellano | ||
பீஃபா குறியீடு | CHI | ||
பீஃபா தரவரிசை | 15 3 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 6 (ஏப்ரல் 1998) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 84 (திசம்பர் 2002) | ||
எலோ தரவரிசை | 10 | ||
அதிகபட்ச எலோ | 5 (சூலை 2011) | ||
குறைந்தபட்ச எலோ | 60 (2003) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
அர்கெந்தீனா 3–1 Chile (Buenos Aires, அர்கெந்தீனா; 27 May 1910) | |||
பெரும் வெற்றி | |||
Chile 7–0 வெனிசுவேலா (Santiago, சிலி; 29 August 1979) Chile 7–0 ஆர்மீனியா (Viña del Mar, சிலி; 4 January 1997)[1] | |||
பெரும் தோல்வி | |||
பிரேசில் 7–0 Chile (Rio de Janeiro, Brazil; 17 September 1959) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1930 இல்) | ||
சிறந்த முடிவு | மூன்றாம் இடம், 1962 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 38 (முதற்தடவையாக 1916 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 2015, 2016 | ||
2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக கோபா அமெரிக்காவை வென்றனர்; அப்போட்டித் தொடர் சிலி நாட்டிலேயே நடத்தப்பெற்றது. அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டியிலும் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சிலியின் தேசிய கால்பந்து அணியானது அவர்களின் நிலையான-செயல்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். 21 முறை, கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் சிறந்த 4 அணிகளுள் ஒன்றாக முடித்துள்ளனர்; 4 முறை இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.