சியார்சியா தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
சியார்சியா தேசிய காற்பந்து அணி அல்லது ஜோர்ஜியத் தேசியக் காற்பந்து அணி (Georgia national football team, சியார்சிய: საქართველოს ეროვნული საფეხბურთო ნაკრები) என்பது ஆண்கள் பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் சியார்சியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது சியார்சியக் கால்பந்துக் கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. சியார்சிய அணியின் முதல் போட்டி 1990 இல் அந்நாடு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது நடைபெற்றது. யூஈஎஃப்ஏ யூரோ 1996 முதல் ஒவ்வொரு பெரிய போட்டிகளுக்கும் சியார்சிய அணி தகுதி பெற முயற்சித்துள்ளது, இந்நாட்டின் முதல் பன்னாட்டுப் பங்கேற்பு யூரோ 2024 இல் ஆகும். சியார்சியத் தேசிய அணியின் உள்ளூர் ஆட்டங்கள் திபிலீசியில் உள்ள போரிசு பைச்சாட்சே தினாமோ திடலில் விளையாடப்படுகின்றன.
![]() | ||||
அடைபெயர் | ჯვაროსნები சிலுவைப்போர் வீரர்கள் | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | சியார்சிய காற்பந்துக் கூட்டமைப்பு | |||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | |||
தலைமைப் பயிற்சியாளர் | வில்லி சாக்னோல் | |||
அணித் தலைவர் | குராம் காசியா | |||
Most caps | குராம் காசியா (113) | |||
அதிகபட்ச கோல் அடித்தவர் | சோட்டா அர்வெலாத்சே (26) | |||
தன்னக விளையாட்டரங்கம் | போரிசு பைச்சாத்சே தினாமோ திடல் (முதன்மை), அசாரபெத் திடல், மிக்கேல் மேசுக்கி திடல், ரமாசு சஙேலியா திடல் | |||
பீஃபா குறியீடு | GEO | |||
பீஃபா தரவரிசை | 78 ![]() | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 42 (செப்டெம்பர் 1998) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 156 (மார்ச் 1994) | |||
எலோ தரவரிசை | 49 ![]() | |||
அதிகபட்ச எலோ | 49 (11 அக்டோபர் 1995) | |||
குறைந்தபட்ச எலோ | 108 (2009) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
அதிகாரபூர்வமற்றது சியார்சியா SSR ![]() ![]() (திபிலீசி, சியார்சியா; 27 மே 1990) அதிகாரபூர்வம் ![]() ![]() (கவுனாசு, லித்துவேனியா; 2 செப்டம்பர் 1992) | ||||
பெரும் வெற்றி | ||||
![]() ![]() (திபிலீசி, சியார்சியா; 12 அக்டோபர் 2023) | ||||
பெரும் தோல்வி | ||||
![]() ![]() (திபிலீசி, சியார்சியா; 8 செப்டம்பர் 2023) | ||||
ஐரோப்பிய வாகை | ||||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2024 இல்) | |||
சிறந்த முடிவு | TBD (2024) |
சியார்சிய காற்பந்துக் கூட்டமைப்பு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம், பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றில் 1992 இல் உறுப்பினரானது,[3] இது சியார்சியாவிற்கு போட்டிகளில் விளையாட உதவியது. இவற்றில் முதலாவது செப்டம்பர் 1994 இல், யூரோ 1996 இற்கான தகுதிப் போட்டியின் ஒரு பகுதியாக மல்தோவாவிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.[4] சியார்சியா தனது குழுவில் மல்தோவா, வேல்சு, அல்பேனியா அணிகளைவிட மூன்றாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் இரண்டாவது இடத்தைப் பிடித்த பல்கேரியாவில் இருந்து ஏழு புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
சியார்சியா பிரான்சில் நடைபெற்ற 1998 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு விளையாடத் தகுதி பெறவில்லை. அப்போது சியார்சியா பிஃபா உலகத் தரவரிசையில் 42-ஆவது நிலையில் இருந்தது.
யூரோ 2024 இற்கான தகுதி-காண் போட்டியில் 0-0 என்ற கோல் கணக்கில் கிரேக்கத்தை சமன்நீக்கி மோதலில் 4–2 என்ற கணக்கில் தோற்கடித்தது, இது சியார்சியாவின் முதல் பன்னாட்டுப் போட்டிக்கு உத்தரவாதம் அளித்தது.[5][6][7][8][9][10]