சாஆ
மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
சாஆ, (மலாய்: Chaah; ஆங்கிலம்: Chaah; சீனம்: 三合港; ஜாவி: شاه) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் சிகாமட் மாவட்டத்தின் தெற்கே உள்ள ஒரு முக்கிம் ஆகும். ஆனாலும் இது லாபிஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியாக நிர்வகிக்கப் படுகிறது.[1]
விரைவான உண்மைகள் சாஆ, நாடு ...
சாஆ | |
---|---|
Chaah | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°14′N 103°02′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | சிகாமட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 184 km2 (71 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 15,627 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 85400 |
இடக் குறியீடு | +6-0792 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
மூடு
ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து வடக்கே சுமார் 118 கி.மீ. தொலைவிலும்; சிகாமட் நகரில் இருந்து தெற்கே 45 கி.மீ. தொலைவிலும் சாஆ நகரம் அமைந்துள்ளது.
சாஆ எனும் பெயர் ஒரு சீனச் சொல்லில் இருந்து மருவியதாகக் கருதப் படுகிறது. இங்கு மூன்று ஆறுகள் ஒன்று கூடுவதால் அந்த இடத்திற்கு சாகெ காங் (San He Gang) எனப் பெயர் வந்ததாகவும் உள்ளூர் மக்கள் சொல்கின்றார்கள்.[2]