From Wikipedia, the free encyclopedia
சம்பா (Samba) வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பிரதேசத்தில் அமைந்த சம்பா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சம்பா நகரம் ஜம்முவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 384 மீட்டர் உயரத்தில் சிவாலிக் மலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) சம்பா நகரத்தின் வழியாகச் செல்கிற்து.
சம்பா | |
---|---|
நகரம், நகராட்சி | |
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் சம்பா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 32.57°N 75.12°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | சம்பா |
பெயர்ச்சூட்டு | Sambyal Clan |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.65 km2 (0.64 sq mi) |
ஏற்றம் | 384 m (1,260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,700 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 184121 |
இணையதளம் | http://www.ulbjammu.org/samba.php |
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பை, 1.65 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13 வார்டுகளும், 2,566 வீடுகளும் கொண்ட சம்பா நகராட்சியின் மக்கள் தொகை 12,700 ஆகும். அதில் ஆண்கள் 6,979 மற்றும் பெண்கள் 5,721 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 820 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1365 (10.75%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.45% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.45%, இசுலாமியர் 0.47%, கிறித்தவர் 2.08%, சீக்கியர்கள் 1.76% ஆக உள்ளனர்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.