சத்யராஜ்
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
சத்யராஜ் சுப்பையன் (Sathyaraj, பிறப்பு: 3 அக்டோபர் 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
விரைவான உண்மைகள் சத்யராஜ், பிறப்பு ...
சத்யராஜ் | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 3, 1954 (1954-10-03) (அகவை 69) கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
துணைவர் | மகேஸ்வரி |
பிள்ளைகள் | திவ்யா, சிபிராஜ் |
மூடு
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.[1]