செங்கிஸ் கானின் இரண்டாவது மகன், சகத்தாய் கானரசின் கான் From Wikipedia, the free encyclopedia
சகதாயி கான் (மொங்கோலியம்: Цагадай; நடு மொங்கோலியம்: ᠴᠠᠭᠠᠲᠠᠶ சகடய்; உய்குர்: چاغاتايخان, சகடய்-கான்; சீன மொழி: 察合台, சகேடை; துருக்கியம்: சகடய்; பாரசீக மொழி: جغتای, ஜோகடை; 22 திசம்பர் 1183 – 1 சூலை 1242) செங்கிஸ் கானின் இரண்டாவது மகன் ஆவார். இவர் கி.பி. 1226லிருந்து-கி.பி. 1242 வரை சகதாயி கானரசின் கானாகப் பதவி வகித்தார்.[1] சகதாயி மொழி மற்றும் சகதாயி மக்கள் இவருக்குப்பின் பெயரிடப்பட்டனர். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஐந்து மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவற்றைப் பெற்றார்.[1] செங்கிஸ் கான் உருவாக்கிய சட்டமான யசாவின் செயலாக்கத்தை மேற்பார்வை செய்ய இவர் செங்கிஸ் கானால் நியமிக்கப்பட்டார், இருப்பினும் அது செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசின் முடிசூட்டப்பட்ட கானாக இருந்தவரை மட்டுமே நீடித்தது.[1] இவரது பேரரசானது மங்கோலியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்டு சகதாயி கானரசாகப் பெயர் பெற்றது. சூச்சியை பெரிய கானாக ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் இவர் ஒரு மூர்க்கனாகவும் மற்றும் சற்றே நிதானமானவராக உறவினர்களாலும் கருதப்பட்டார்.[1] இவரது உறவினர்களில் இந்த பிரச்சினையைப் பற்றி இவர் மிகவும் கடினமாகக் குரல் கொடுத்தார். சகதாயி ஒரு எளிய மற்றும் ஆற்றல் மிக்க ஆளுநராக தோன்றுகிறார், ஒருவேளை கடினமானவராகவும், அருவருப்பானவராகவும் இருந்திருக்கலாம். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார்.[1] எவ்வாறாயினும், சகதாயி தனது தந்தையின் போர்வீரன் போன்ற சுறுசுறுப்புடன் இருந்தார். ஒரு ராச்சியமாக பலவகைப்பட்ட மக்கள் மத்தியில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எப்போதும் வெற்றி கண்டார்.[1]
சகதாயி கான் | |
---|---|
சகதாயி கான் சிலை, மங்கோலியா | |
ஆட்சிக்காலம் | 1226 – 1241-42 |
முன்னையவர் | செங்கிஸ் கான் |
பின்னையவர் | கரா குலாகு |
பிறப்பு | 22 திசம்பர் 1183 |
இறப்பு | 1 சூலை 1242 58) அல்மலிக் | (அகவை
மனைவி | எசுலுன் கதுன் தோகன் கதுன் செவின்சு கதுன் |
குழந்தைகளின் பெயர்கள் | முத்துகன் பைதர் எசு மோங்கே |
குலமரபு | போர்சிசின் |
தந்தை | செங்கிஸ் கான் |
தாய் | போர்ட்டே உஜின் கதுன் |
மதம் | தெங்கிரி மதம் |
1232-ல் புகாராவில் பிரிவு காணப்பட்ட போது இவர் உடனடியாக கண்டிப்புடன் நடந்து கொண்டு தனது நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.[1][page needed] எல்லா வகையிலும் இவர் ஒரு பழைய மங்கோலியனாகவே இருந்தார். யசா சட்டங்களை பின்பற்றினார். அந்நேரத்தில் அவரது பகுதிகளில் தோன்றிய புது மற்றும் வளர்ந்து வந்த மதமான இஸ்லாமிற்கு சிறிதளவே கரிசனம் காட்டினார்.[1][page needed] ஆனால் இவர் கண்டிப்பாக சமய சகிப்புத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். திரான்சோக்சியானாவிற்கான மந்திரியாக இவர் ஒரு முஸ்லிமை நியமித்தார் என பதிவுகள் உள்ளன. அந்த முஸ்லிமின் பெயர் ஜுமிலட்-உல்-முல்க் அல்லது கரசர் நெவியன்.[2] மசூதிகள் மற்றும் கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டன.[1][page needed] அந்நேரத்தில் நெசுத்தோரியர்களால் கிறித்தவ மதம் பின்பற்றப்பட்டது. அவர்கள் இவருக்கு நல்ல பரிச்சயமானவர்களாக இருந்திருக்க வேண்டும். எனினும் இவர் கிறித்தவ மதம் பக்கம் சாய வில்லை.[1][page needed]
சகத்தாயின் தலைநகரம் அல்மலிக்கில் அமைந்திருந்தது. இது அவரது நாட்டின் கிழக்கு கோடி பகுதியில் மேல் இலி பள்ளத்தாக்கில் தற்காலக் குல்ஜா நகரத்தின் அருகில் அமைந்திருந்தது.[1][page needed] புகாரா அல்லது சமர்கந்தில் தன் தலைநகரை அமைக்காமல் தொலைதூரத்தில் தலை நகரை அமைத்ததற்கு ஒரு காரணமும் இருந்திருக்கலாம். இவரது மங்கோலிய பழங்குடி ஆண்கள் மற்றும் இவரது ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த இவரை பின்பற்றுபவர்கள் புல்வெளி வாழ்க்கையை மிகவும் விரும்பினர்.[1][page needed] அவர்களது பார்வையில் வீடுகள் மற்றும் பட்டணங்களில் வாழ்பவர்கள் சிதைந்த மற்றும் ஆண் தன்மையற்ற இனம்: அவர்களது முதலாளிகள் சொகுசாக வாழ்வதற்காக நிலத்தை தூர்வார்பவர்கள், மாடு போல உழைக்கும் அடிமைகள். சுதந்திர மனிதனாக வாழாத ஒரு கானுக்கு பழங்குடியின ஆண்கள் பணி புரிய மாட்டார்கள். சகதாயி மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் இதனை புரிந்து கொண்டிருக்கலாம். இவரது பிந்தைய வழித்தோன்றல்களான மிர்சா முகம்மது ஹைதர் துக்லத் போன்றோரால் இது விளக்கப்பட்டுள்ளது: அவர்களது சொந்த மக்களின் ஆதரவை தக்கவைக்க அவர்களுடன் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே சிறந்ததாக இருக்கும்.[1][page needed]
16 வருடம் ஆட்சி செய்த பிறகு சகதாயி 1242ல் இறந்தார். அதே வருடத்தில் ஒக்தாயியும் கரகோரத்தில் இறந்தார்.[1][page needed] மங்கோலிய பேரரசின் நான்கு தலைமை பிரிவுகளில் இரண்டு பிரிவுகளுக்கு தலைவர்கள் இல்லாமல் போனது. இதன் காரணமாக செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் தலைமைப் பதவிக்கு போட்டி போட ஆரம்பித்தனர்.[1][page needed] ஒக்தாயியின் விதவை தோரேசின் கதுன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சிறிது காலத்திற்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது.[1][page needed] ஆனால் நீண்ட கால பிரச்சினைகள் எதிரெதிர் குடும்பங்களுக்குள் உருவாயின. மங்கோலியப் பேரரசின் அடுத்த கான் யார் என்ற கேள்வி பல நிகழ்வுகளுக்குள் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்திருந்தது. குறிப்பாக சகதாயி கானரசின் கிழக்குப் பகுதியில்.[1][page needed]
தான் இறக்கும் முன்னர் சகதாயி தனது ராஜ்யத்தை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்பது பற்றி சிறிதளவு தெரியவருகிறது. தனது நாட்டை தன் வழித்தோன்றல்களுக்கு பாரம்பரிய முறைப்படி பிரித்து கொடுத்ததாக எங்குமே குறிப்பிடப்பட்டதாக தெரியவில்லை. இவர் இறந்த போது இவருக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்ததாக பதியப்பட்டுள்ளது. ஆனால் இவர் இறந்த பிறகு இவரது விதவை எபுஸ்குன் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டு இவரது பேரன் மற்றும் சிறுவனாகிய காரா ஹுலாகு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.[1][page needed]
1221 இல் பாமியான் முற்றுகையின்போது சகத்தாயின் மகன் முத்துகன் கொல்லப்பட்டான்.[3]
துருக்கிஸ்தான், திரான்சோக்சியானா மற்றும் அருகில் இருந்த பகுதிகள் இவரது வழித்தோன்றல்களால் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் கஷ்கர், யர்கந்த், கோடன், அக்சு மற்றும் தியான் சான் மலைகளின் தெற்கு சரிவுகள் அல்லது மற்றொரு முறையில் கூற வேண்டுமானால் தியான் சான் கோட்டின் தெற்கு பகுதியில் இருந்த மாகாணம் இவரது வழித்தோன்றல்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. அப்பகுதிகள் கிழக்கு துருக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டன.[1][page needed] மிர்சா முஹம்மத் ஹைதர் துக்லத்தின் கூற்றுப்படி இந்த மாகாணம் சகத்தாயால் அவரது இறப்பின் போது துக்லத் இனம் அல்லது குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டது. அம்மக்கள் தூய மங்கோலிய வழித்தோன்றல்களாக கருதப்பட்டனர். மங்கோலியர்களிலேயே உயர்குடி பிரிவாகவும் இருந்தனர்.[1][page needed] இவ்வாறாக சகதாயி காலத்திலிருந்தே துக்லத்துகள் கிழக்கு துருக்கிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரம்பரை தலைவர்களாகவோ அல்லது அமிர்களாகவே ஆக்கப்பட்டனர். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் சகத்தாயின் ஆட்சிப்பகுதிகள் பிற்காலத்தில் நிரந்தரமாக இரண்டாக ஆயின.[1][page needed]
பைதர் சகத்தாயின் இரண்டாவது மகன் ஆவார். 1235-1241 காலகட்டத்தில் தனது அண்ணன் மகன் புரியுடன் பைதர் ஐரோப்பிய படையெடுப்பில் (மங்கோலியாவில் இப்படையெடுப்பு "பெரிய சிறுவர்களின் படையெடுப்பு" என்று அழைக்கப்பட்டது) கலந்து கொண்டார். இவர் போலந்திற்கு எதிராக ஒதுக்கப்பட்ட மங்கோலிய ராணுவத்தில் கதானுடன் இணைந்து சண்டையிட்டார். இவருடன் ஓர்டா கானும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மே 1241 இன் ஆரம்பத்தில் இவர்கள் மோராவியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் புர்னோ வழியாக ஹங்கேரியில் இருந்த படுவின் பெரிய ராணுவத்துடன் இணைவதற்காக சென்றனர். போலந்து, சிலேசியா மற்றும் மோராவியா ஆகிய அனைத்து இடங்களிலுமே அழிவானது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.
1247 இல் குயுக் கான் மங்கோலியப் பேரரசின் கானாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது பைதர் அந்தத் தேர்ந்தெடுப்பில் கலந்து கொண்டார்.
மவுசி சகத்தாயின் மகன் ஆவார். இவர் படு கானின் மருமகன் ஆவார்.[4]
ஜியோவானி டா பியன் டெல் கர்பினி தனது நாம் தாதர்கள் என்று அழைக்கும் மங்கோலியர்களின் வரலாறு (இஸ்டோரியா மங்கலோரம்) எனும் நூலில் மவுசியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.[5] கர்பினியின் நூலில் மவுசி கோமன்களின் (குமன்கள்) நிலத்தில் தினேப்பர் ஆற்றின் இடது கரையில் இருந்த பகுதியை ஆண்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வலது கரையில் இருந்த கோரென்காவுக்கு (குரேம்சா) இவர் மூத்தவர் ஆவார்.
பாபர் தான் எழுதிய நூலான பாபர் நாமாவின் அத்தியாயம் 1 பக்கம் 19 இல் தனது தாய் வழி தாத்தா யுனஸ் கானின் வம்சாவளியை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
செங்கிஸ் கானின் இரண்டாவது மகனான சகதை கானின் வழித்தோன்றலாக யுனஸ் கான் தோன்றினார் (பின்வருமாறு) யுனஸ் கான், அவரது தந்தை வைஸ் கான், அவரது தந்தை ஷெர்-'அலி அவுக்லதன், அவரது தந்தை முஹம்மத் கான், அவரது தந்தை கிசிர் கவாஜா கான், அவரது தந்தை துக்லக்-திமுர் கான், அவரது தந்தை அயிசன்-புகா கான், அவரது தந்தை டவா கான், அவரது தந்தை பரக் கான், அவரது தந்தை எசுன்தவா கான், அவரது தந்தை முத்துகன், அவரது தந்தை சகதை கான், அவரது தந்தை சிங்கிஸ் கான்.[6]
|
|
|
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுஜின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதாயி | ஒக்தாயி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.