இந்திய தடகள வீரர் From Wikipedia, the free encyclopedia
கலையாத்தும்குழி மாத்யூஸ் பீனாமோல் (Kalayathumkuzhi Mathews Beenamol) (15 ஆகத்து 1975 ) பிரபலமாக கே. எம். பீனாமோல் என்றும் அழைக்கப்படுகின்ற இவர், இந்தியாவின் கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் கொம்பிடிஞ்சல் என்ற ஊரைச் சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீராங்கனையாவார்.
![]() 2010 ஆம் ஆண்டில் கேரள முதல்வரிடம் இராணியின் முத்திரையை பீனாமோல் ஒப்படைத்தார் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | கலையாத்தும்குழி மாத்யூஸ் பீனாமோல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இனம் | மலையாளிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியுரிமை | இந்தியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 15 ஆகத்து 1975 கொம்பிடிஞ்சல், இடுக்கி மாவட்டம், கேரளம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் செயலில் | 1990–2004 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Employer | இந்திய இரயில்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 163 cm (5 அடி 4 அங்)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 50 கிலோகிராம்கள் (110 lb)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர்(கள்) | மருத்துவர் விவேக் ஜோர்ஜ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | விரைவோட்டம் (400 மீ.) இடைத்தொலைவு ஓட்டம் (800 மீ.) தொடரோட்டம்(4 × 400 மீ.) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | இராஜு பால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 400 m: 51.21 (கீவ், 2000)[2] 800 m: 2:02.01 (புது தில்லி, 2002)[2] 4 × 400 m relay: 3:26.89 (ஏதென்ஸ், 2004) NR | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பீனாமோல் தனது சகோதரர் கே. எம். பினுவுடன் சேர்ந்து ஒரு முக்கிய சர்வதேச போட்டியில் பதக்கங்களை வென்ற முதல் இந்திய உடன்பிறப்புகள் என ஒரு வரலாற்றை உருவாக்கினர். பினு ஆண்கள் 800 மீ. ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2000 கோடைகால ஒலிம்பிக்கின் போது, இவர் பெரிதும் அறியப்படாதவராக இருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 1984 கோடை ஒலிம்பிக்கில் முறையே 800 மீ., 400 மீ. தடையோட்டத்தில் பி. டி. உசா, ஷைனி வில்சன் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியப் பெண்மணி ஆனார்.
புசான் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 800 மீ மற்றும் 4 × 400 மீ. மகளிர் ரிலேவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3] [4] [5]
பீனாமோலுக்கு 2000ஆம் ஆண்டில் அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[6] [7] இவர் துப்பாக்கி சுடுவதில் தொழில்முறை வல்லுநரான அஞ்சலி பகவத்துடன் சேர்ந்து 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு கௌரவமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை இணைந்து பெற்றார்.[8] [9] 2004ஆம் ஆண்டில், இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[10]
பீனாமோல் ஒரு நோயியல் நிபுணரான மருத்துவர் விவேக் ஜார்ஜை மணந்தார். இவர்களுக்கு அசுவின், ஹாய்லி என இரு (எத்தியோப்பியா நாட்டு நீண்ட-தொலைவு தடகள ஓடுநர் ஹாய்லி கெப்ரசிலாசியின் பெயரிடப்பட்டது) குழந்தைகள் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.