From Wikipedia, the free encyclopedia
இடைத்தொலைவு ஓட்டம் (Middle distance) தட கள ஓட்டப் போட்டிகளில் விரைவோட்டத் தொலைவை விடக் கூடுதலாக, உயர்ந்த நிலையாக 3000 மீ வரையான, தொலைவுகளுக்கு நடத்தப்படும் போட்டிகளைக் குறிக்கும். சீர்தரப்படுத்தப்பட்ட போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் மைல் ஓட்டம் என்பனவும் 3000 மீட்டர் ஓட்டமும் இடைத்தொலைவு ஓட்டங்களாக வகைபடுத்தப்படுகின்றன.[1] 800 மீட்டர் ஓட்டத்திற்கு 1830களில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த 880 கெஜ ஓட்டம், அல்லது அரை மைல், போட்டிகள் முன்னோடியாக இருந்தன.[2] இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவலாக இருந்த 500 மீ ஓடுகளத்தில் மூன்று முறை ஓடுவது 1500 மீ போட்டிகளுக்கு வழிவகுத்தது.[3] ஆசிய விளையாட்டுப் இடைத்தொலைவு ஓட்டப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி சௌந்திரராஜன் ஆவர்.
Seamless Wikipedia browsing. On steroids.