![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/KLIA_MTB%2526Tower.jpg/640px-KLIA_MTB%2526Tower.jpg&w=640&q=50)
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், (ஆங்கிலம்: Kuala Lumpur International Airport (KLIA); மலாய்: Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur); சீனம்: 吉隆坡国际机场) என்பது மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கே.எல்.ஐ.ஏ. (KLIA) விமான நிலையம் என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
விமான நிலையம் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||||||
![]() | |||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||
உரிமையாளர் | கசானா நேசனல் (மலேசிய அரசு) | ||||||||||||||||||
இயக்குனர் | மலேசியா ஏர்போர்ட்ஸ் (சிப்பாங்) செண்டிரியான் பெர்காட் | ||||||||||||||||||
சேவை புரிவது | கோலாலம்பூர், மேற்கு மலேசியா | ||||||||||||||||||
அமைவிடம் | சிப்பாங், சிலாங்கூர், மேற்கு மலேசியா | ||||||||||||||||||
திறக்கப்பட்டது | 27 சூன் 1998 | ||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||
கட்டியது | 27 சூன் 1998 | ||||||||||||||||||
உயரம் AMSL | 71 ft / 21 m | ||||||||||||||||||
ஆள்கூறுகள் | 02°44′44″N 101°42′35″E | ||||||||||||||||||
இணையத்தளம் | www.klia.com.my | ||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2020) | |||||||||||||||||||
|
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த விமான நிலையம் புகழப்படுகின்றது. இந்த விமான நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.[1]
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.[2] அதிவிரைவு தொடர்வண்டிச் சேவையின் வழி, இந்த விமான நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.[3]
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் 1992-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. 1994-ஆம் ஆண்டில் அடிப்படைக் கட்டுமானப் பணிகள் உருவகம் பெற்றன. ஜப்பானைச் சேர்ந்த பிரபலமான வடிவமைப்பாளர் டாக்டர் கிசோ குரோகாவா (Kisho Kurokawa) என்பவர் விமான நிலைய வடிவமைப்பைச் செய்தார்.[4]