கோலாகுமுலி பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
கோலாகுமுலி பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Golaghmuli Valley ) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தானில் மேல் கிசரில் உள்ள ஒரு உயர்ந்த மலை பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு சித்ராலின் கிழக்கிலும், சுவாத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. கோலாகுமுலி பள்ளத்தாக்கு சித்ரல் மற்றும் சுவாத்திலிருந்து உயர்ந்த மலைப்பாதைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. கோலாகுமுலி பள்ளத்தாக்கை அடைய, ஒரு நபர் கில்கிட்டிலிருந்து மேற்கே கில்கிட்-சித்ரால் சாலையில் செல்ல வேண்டும். பின்னர் குபிசு வழியாக நேராக தனது பயணத்தைத் தொடர வேண்டும். பிறகு, வடமேற்கு திசையில் யாசின் பள்ளத்தாக்கை அடைந்து நேராக சாலை கோலாகுமுலி பள்ளத்தாக்குக்குச் செல்லலாம்.
விரைவான உண்மைகள் கோலாகுமுலி பள்ளத்தாக்கு وادئ گولاغمولیகோ-இ-கிசர்தெறுசாண்டுர் பள்ளத்தாக்கு, Country ...
கோலாகுமுலி பள்ளத்தாக்கு
وادئ گولاغمولی கோ-இ-கிசர் தெறு சாண்டுர் பள்ளத்தாக்கு | |
---|---|
ஆள்கூறுகள்: 36°09′26″N 72°44′17″E | |
Country | பாக்கித்தான் |
மாநிலம் | வடக்கு நிலங்கள் |
மாவட்டம் | கிசர் மாவட்டம் |
நகரங்கள் | பட்டியல்
|
ஏற்றம் | 3,030 m (9,940 ft) |
அஞ்சல் குறியீடு | 15300 |
இடக் குறியீடு | அ.கு.எண் 15300 |
ஆறுகள் | கிசர் ஆறு |
இணையதளம் | www |
மூடு