From Wikipedia, the free encyclopedia
கோத்தா மருடு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Marudu; ஆங்கிலம்: Kota Marudu Federal Constituency; சீனம்: 哥打马鲁都国会议席) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் கூடாட் பிரிவின், கூடாட் மாவட்டம்; கோத்தா மருடு மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P168) ஆகும்.[5]
கோத்தா மருடு (P168) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kota Marudu (P168) Federal Constituency in Sabah | |
கோத்தா மருடு மக்களவைத் தொகுதி (P168 Kota Marudu) | |
மாவட்டம் | கோத்தா மருடு மாவட்டம்; கூடாட் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 80,735 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா மருடு மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா மருடு மாவட்டம் |
பரப்பளவு | 2,282 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | மக்களாட்சி கட்சி |
மக்களவை உறுப்பினர் | வெத்ரோம் பகாண்டா (Wetrom Bahanda) |
மக்கள் தொகை | 99,998 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா மருடு மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா மருடு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோத்தா மருடு மாவட்டம் என்பது சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா மருடு.
கோத்தா மருடு நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து வடக்கே 130 கி.மீ. தொலைவில்; போர்னியோவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள கூடாட் நகரத்துடன் கோத்தா கினபாலுவை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கூடாட் பிரிவு என்பது சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). இந்தப் பிரிவு சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறிய பிரிவாகும்.
கோத்தா மருடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோத்தா மருடு தொகுதி 2003-ஆம் ஆண்டில் பண்டாவ் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P168 | 2004-2008 | மெக்சிமஸ் ஓங்கிலி (Maximus Ongkili) | பாரிசான் நேசனல் ஐக்கிய சபா கூட்டணி |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2022 | ஐக்கிய சபா கட்சி | |||
2022 | சபா மக்கள் கூட்டணி ஐக்கிய சபா கட்சி | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | வெத்ரோம் பகாண்டா (Wetrom Bahanda) | மக்களாட்சி கட்சி |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
வெத்ரோம் பகாண்டா (Wetrom Bahanda) | மக்களாட்சி கட்சி (KDM) | 24,318 | 48.69 | 48.69 | |
மெக்சிமஸ் ஓங்கிலி (Johnity @ Maximus Ongkili) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 16,144 | 32.32 | 32.32 | |
ஜிலிட் குமின்டிங் (Jilid Kuminding) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 5,320 | 10.65 | 10.33 ▼ | |
சாரிசல் டென்சி (Shahrizal Denci) | மூடா (MUDA) | 3,225 | 6.46 | 6.46 | |
நோர்மன் துலாங் (Norman Tulang) | சுயேச்சை (Independent) | 660 | 1.32 | 1.32 | |
முகமட் அசுமி சுல்கிப்லி (Mohd Azmi Zulkiflee) | தாயக இயக்கம் (GTA) | 279 | 0.56 | 0.56 | |
மொத்தம் | 49,946 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 49,946 | 98.26 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 882 | 1.74 | |||
மொத்த வாக்குகள் | 50,828 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 80,735 | 61.86 | 13.09 ▼ | ||
Majority | 8,174 | 16.37 | 11.14 | ||
{ மக்களாட்சி கட்சி கைப்பற்றியது | |||||
மூலம்: [8] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.