From Wikipedia, the free encyclopedia
கொழுப்பு அமிலம் (Fatty acid) என்பது நிறைவுற்ற அல்லது நிறைவுறாத, நீளமான, கிளைக்காத, கொழுப்பார்ந்த பின் தொடரியைக் கொண்ட கார்பாக்சிலிக் அமிலமாகும். இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (நாலு முதல் இருபத்தியெட்டு வரை) கார்பன் அணுக்களைத் தொடரியாகக் கொண்டிருக்கும்[1]. சாதாரணமாகக் கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடு மற்றும் பாஸ்போகொழுமியத்திலிருந்து வருவிக்கப்பட்டவையாகும். கொழுப்பு அமிலங்கள் பிற மூலக்கூறுகளுடன் இணைக்கப்படாமல் இருக்கும்போது, தனிக்கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்திற்குப்பின் அதிக அளவு சக்தியைக் (ATP) கொடுப்பதால், இவை மிக முக்கியமான எரிபொருள் மூலங்களாகக் கருதப்படுகின்றன. பல்வேறு உயிரணுக்களும் தங்கள் சக்தி தேவைக்காகக் குளுக்கோசு அல்லது கொழுப்பு அமிலங்களை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. முக்கியமாக, இதயம் மற்றும் எலும்புத்தசைகள் கொழுப்பு அமிலங்களை மிகுதியாக விரும்புகின்றன. ஆனால், மூளையானது கொழுப்பு அமிலங்களை எரிபொருள் மூலமாகப் பயன்படுத்த இயலாது. மூளை குளுக்கோசு அல்லது கீட்டோன் உடலங்களைப் பயன்படுத்துகிறது.[2].
இரட்டைப்பிணைப்பினைக் கொண்டவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் எனவும், இரட்டைப்பிணைப்பில்லாதவை நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவைகள் நீளத்திலும் வேறுபடுகின்றன.
தனிக்கொழுப்பு அமிலங்களின் தொடரிகள் நீளத்தில் (சிறிய, நடுத்தர மற்றும் நீளமான வடிவங்கள்) வேறுபடுகின்றன.
நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் கார்பன் அணுக்களுக்கிடையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டவையாகும். கொழுப்பார்ந்தத் தொடரியிலுள்ள இரட்டைப்பிணைப்புகளின் இருபக்கங்களிலும் உள்ள கார்பன் அணுக்கள் ஒருபக்கமாகவோ (சிஸ்)அல்லது மாறுபக்கமாகவோ (டிரான்ஸ்) அமைந்திருக்கும்.
ஒருபக்க அமைவடிவத்தில் பக்க ஹைட்ரசன் அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் ஒருபக்கத்திலேயே இருக்கும். இரட்டைப்பிணைப்பின் இறுக்கம் அமைவடிவத்தினை முடக்குவதால், ஒருபக்க மாற்றியத்தில், பக்கத் தொடரியானது வளைந்து கொழுப்பு அமிலத்தின் தளையற்ற வடிவமைப்பினைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், மாறுபக்க அமைவடிவத்தில் பக்க ஹைட்ரசன் அணுக்கள் இரட்டைப்பிணைப்பின் எதிர்-எதிர்ப் பக்கங்களில் இருப்பதால் மாறுபக்க மாற்றியத்தில் பக்கத் தொடரி அதிக அளவு வளைய வேண்டிய அவசியம் இல்லை. இதனால், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைப்போல இவை நேரான வடிவத்தினைக் கொண்டிருக்கும். இயற்கையில் காணப்படும் பெரும்பாலான நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களில் ஒவ்வொரு இரட்டைப் பிணைப்பையடுத்தும் மூன்று (சிலவற்றில் அதற்குக் குறைவாகக்) கார்பன் அணுக்கள் இருக்கும். இவை அனைத்துமே ஒருபக்கப் பிணைப்புகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மாறுபக்க வடிவத்தினைக் கொண்ட கொழுப்பு அமிலங்கள் இயற்கையில் காணப்படுவதில்லை; இவை மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. (எ-டு) ஹைட்ரசனாக்கம். பல்வேறு நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, மேலும் நிறைவுற்ற – நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களுக்கிடையிலுள்ள, வடிவியல் வேறுபாடுகள் உயிரிய வளர்ச்சியிலும், கட்டமைப்புகளிலும் [(உ-ம்) செல் சவ்வுகள்] முக்கியப் பங்காற்றுகின்றன.
பொது பெயர் | வேதி வடிவம் | Δx | C:D | n−x |
---|---|---|---|---|
மைரிஸ்டோலெயிக் அமிலம் | CH3(CH2)3CH=CH(CH2)7COOH | ஒருபக்க-Δ9 | 14:1 | n−5 |
பால்மிட்டோலெயிக் அமிலம் | CH3(CH2)5CH=CH(CH2)7COOH | ஒருபக்க-Δ9 | 16:1 | n−7 |
சாப்பியெனிக் அமிலம் | CH3(CH2)8CH=CH(CH2)4COOH | ஒருபக்க-Δ6 | 16:1 | n−10 |
ஒலெயிக் அமிலம் | CH3(CH2)7CH=CH(CH2)7COOH | ஒருபக்க-Δ9 | 18:1 | n−9 |
எலைடிக் அமிலம் | CH3(CH2)7CH=CH(CH2)7COOH | மாறுபக்க-Δ9 | 18:1 | n−9 |
வேக்செனிக் அமிலம் | CH3(CH2)5CH=CH(CH2)9COOH | மாறுபக்க-Δ11 | 18:1 | n−7 |
லினோலெயிக் அமிலம் | CH3(CH2)4CH=CHCH2CH=CH(CH2)7COOH | ஒருபக்க,ஒருபக்க-Δ9,Δ12 | 18:2 | n−6 |
லினோஎலைடிக் அமிலம் | CH3(CH2)4CH=CHCH2CH=CH(CH2)7COOH | மாறுபக்க,மாறுபக்க-Δ9,Δ12 | 18:2 | n−6 |
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் | CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)7COOH | ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க-Δ9,Δ12,Δ15 | 18:3 | n−3 |
அராகிடோனிக் அமிலம் | CH3(CH2)4CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)3COOHNIST | ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க-Δ5Δ8,Δ11,Δ14 | 20:4 | n−6 |
இகோசாபென்டயினோயிக் அமிலம் | CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)3COOH | ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க-Δ5,Δ8,Δ11,Δ14,Δ17 | 20:5 | n−3 |
எருசிக் அமிலம் | CH3(CH2)7CH=CH(CH2)11COOH | ஒருபக்க-Δ13 | 22:1 | n−9 |
டொகோசாஹெக்சாயினோயிக் அமிலம் | CH3CH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CHCH2CH=CH(CH2)2COOH | ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க,ஒருபக்க-Δ4,Δ7,Δ10,Δ13,Δ16,Δ19 | 22:6 | n−3 |
மனிதர்களுக்குத் தேவையான, நம் உடலால் தேவையான அளவு உருவாக்க முடியாத, உணவிலிருந்து கிடைக்க வேண்டிய, கொழுப்பு அமிலங்கள் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்றழைக்கப்படுகின்றன. இரண்டு வகையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் உள்ளன: முதலாவதாக, மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள மூன்றாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை (ஒமேகா-3 கொழுப்பு அமிலம்); மற்றொன்று மீத்தைல் முனையிலிருந்து கணக்கிடும்போது உள்ள ஆறாவது கார்பன் அணுவிலிருந்து இரட்டைப் பிணைப்பு தொடங்குபவை (ஒமேகா-6 கொழுப்பு அமிலம்).
கொழுப்பு அமிலங்களில், கார்பாக்சில் அமிலத் தொகுதியிலிருந்து கணக்கிடும்போது, ஒன்பது-பத்தாம் கார்பன் அணுக்களுக்குப் பின் இரட்டைப் பிணைப்புகளை மனிதர்களால் உருவாக்க முடிவதில்லை[5]. எனவே, லினோலெயிக் அமிலம் (LA) மற்றும் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA) ஆகிய இரண்டும் இன்றியமையாக் கொழுப்பு அமிலங்களாகும். இவை தாவர எண்ணெய்களில் பரவலாகக் காணப்படுகின்றன. நம்மால் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தை நீள் தொடரிக் (n-3) கொழுப்பு அமிலமாக்கும் [இகோசாபென்டயினோயிக் அமிலம்; EPA) மற்றும் டோகோசாஹெக்சாயினோயிக் அமிலம் (DHA)] திறமை வரம்புக்குட்பட்டுள்ளதால், இவைகளையும் மீன் உணவிலிருந்து நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இரட்டைப் பிணைப்பற்ற, பன்னிரெண்டிலிருந்து இருபத்துநான்கு கார்பன் அணுக்கள் உள்ள, நீள்தொடரி கார்பாக்சில் அமிலங்கள் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களாகும். நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஹைட்ரசனைக் கொண்டு இரட்டைப் பிணைப்பைக் குறைப்பதன் மூலம் நிறைவு பெறுகின்றன. நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ஒற்றைப் பிணைப்பை மட்டுமே கொண்டுள்ளதால், இதிலுள்ள ஒவ்வொரு கார்பன் அணுவும் இரண்டு ஹைட்ரசன் மூலகூறுகளைக் கொண்டுள்ளன (விதிவிலக்காக, தொடரி முடிவிலுள்ள ஒமேகா கார்பன் மூன்று ஹைட்ரசன்களைக் கொண்டுள்ளது).
பொது பெயர் | வேதி வடிவம் | கார்பன் எண்ணிக்கை:இரட்டைப்பிணைப்பு எண்ணிக்கை |
---|---|---|
காப்பிரிலிக் அமிலம் | CH3(CH2)6COOH | 8:0 |
காப்ரிக் அமிலம் | CH3(CH2)8COOH | 10:0 |
லாரிக் அமிலம் | CH3(CH2)10COOH | 12:0 |
மைரிஸ்டிக் அமிலம் | CH3(CH2)12COOH | 14:0 |
பால்மிடிக் அமிலம் | CH3(CH2)14COOH | 16:0 |
இஸ்டியரிக் அமிலம் | CH3(CH2)16COOH | 18:0 |
அராகிடிக் அமிலம் | CH3(CH2)18COOH | 20:0 |
பெஹெனிக் அமிலம் | CH3(CH2)20COOH | 22:0 |
லிக்னோசெரிக் அமிலம் | CH3(CH2)22COOH | 24:0 |
செரோடிக் அமிலம் | CH3(CH2)24COOH | 26:0 |
கீழ்காணும் அட்டவணையில் சில சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் உணவு கொழுப்புகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உயிர்ச்சத்து ஈ மற்றும் கொலஸ்டிரால் பொதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன[6][7].
நிறைவுற்றவை | ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் | பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் | கொலஸ்டிரால் | உயிர்ச்சத்து ஈ | |
---|---|---|---|---|---|
கி/100கி | கி/100கி | கி/100கி | மிகி/100கி | மிகி/100கி | |
விலங்கு கொழுப்புகள் | |||||
பன்றிக் கொழுப்பு | 40.8 | 43.8 | 9.6 | 93 | 0.00 |
வாத்துக் கொழுப்பு[8] | 33.2 | 49.3 | 12.9 | 100 | 2.70 |
வெண்ணெய் | 54.0 | 19.8 | 2.6 | 230 | 2.00 |
தாவர கொழுப்புகள் | |||||
தேங்காய் எண்ணெய் | 85.2 | 6.6 | 1.7 | 0 | .66 |
பனை எண்ணெய் (புல்லின மர எண்ணெய்) | 45.3 | 41.6 | 8.3 | 0 | 33.12 |
பருத்திவிதை எண்ணெய் | 25.5 | 21.3 | 48.1 | 0 | 42.77 |
கோதுமை முளை எண்ணெய் | 18.8 | 15.9 | 60.7 | 0 | 136.65 |
சோயா அவரை எண்ணெய் | 14.5 | 23.2 | 56.5 | 0 | 16.29 |
ஆலிவ் எண்ணெய் | 14.0 | 69.7 | 11.2 | 0 | 5.10 |
சோள எண்ணெய் | 12.7 | 24.7 | 57.8 | 0 | 17.24 |
சூரியகாந்தி எண்ணெய் | 11.9 | 20.2 | 63.0 | 0 | 49.0 |
குசம்பப்பூ எண்ணெய் | 10.2 | 12.6 | 72.1 | 0 | 40.68 |
சணல் எண்ணெய் | 10 | 15 | 75 | 0 | |
காட்டுக்கடுகு/ரேப் விதை எண்ணெய் | 5.3 | 64.3 | 24.8 | 0 | 22.21 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.