![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/06/Tea_fields_%2528Will_Ellis%2529.jpg/640px-Tea_fields_%2528Will_Ellis%2529.jpg&w=640&q=50)
கேமரன் மலை
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
(கேமரன் மலை என்று அழைக்கப்பட்ட கேமரன் மலை நகரம், அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.)
கேமரன்மலை | |
---|---|
Cameron Highlands District | |
மாவட்டம்![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°30′N 101°30′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
நில ஆய்வு | 1885 - வில்லியம் கேமரன் |
தொகுதி | தானா ராத்தா |
உள்ளூராட்சி | கேமரன்மலை நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 275.36 km2 (106.32 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 34,510 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 39xxx |
மலேசியத் தொலைபேசி | +6-05 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
இணையதளம் | www |
கேமரன் மலை (ஆங்கிலம்: Cameron Highlands District; மலாய்: Daerah Cameron Highlands; சீனம்: 金馬崙高原縣; ஜாவி: تانه تيڠڬي كاميرون ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு கேமரன் மலை நகரம் என்று அழைக்கப்பட்டது. அண்மையில் கேமரன்மலை மாவட்டம் என நிர்வாகத் தகுதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கேமரன் மலை மாவட்டத்தின் தலைப் பட்டணம் தானா ராத்தா. பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மலேசியாவிலேயே அதிகமான மலை ஊர்களைக் கொண்ட ஒரு மலைப்பகுதியாகும்.
கேமரன் மலை மாவட்டம் சிங்கப்பூர் அளவிற்கு 712 சதுர கி,மீ. பரப்பளவைக் கொண்டது. தித்திவாங்சா மலைத்தொடர் எனும் தீபகற்ப மலேசியாவின் மத்திய மலைத் தொடரில் இந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ளது.