From Wikipedia, the free encyclopedia
கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி (மலாய்: KTM Komuter Sektor Utara ஆங்கிலம்: KTM Komuter Northern Sectorr; சீனம்: 马来亚铁道通勤铁路北马区); என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பதியைக் குறிப்பதாகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தின் 5 சேவைகளில் இந்தச் சேவையும் ஒன்றாகும்.
கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி KTM Komuter Northern Sector 1 2 | |||
---|---|---|---|
கேடிஎம் 83 ரக கொமுட்டர் வண்டி | |||
கண்ணோட்டம் | |||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வட்டாரம் | பினாங்கு பெருநகரம், பேராக், கெடா, பெர்லிஸ் | ||
முனையங்கள் | |||
நிலையங்கள் | 20 | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
வகை | பயணி தொடருந்து | ||
அமைப்பு | கேடிஎம் கொமுட்டர் | ||
சேவைகள் | 1 பட்டர்வொர்த்–பாடாங் ரெங்காஸ் 2 பட்டர்வொர்த்–பாடாங் பெசார் | ||
பாதை எண் | 1, 2 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் (கொமுட்டர் பிரிவு) | ||
பணிமனை(கள்) | புக்கிட் தெங்கா | ||
சுழலிருப்பு | KTM Class 81 3-car formation KTM Class 83 3-car formation KTM Class 92 6-car formation | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 11 செப்டம்பர் 2015 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | பட்டர்வொர்த்–பாடாங் ரெங்காஸ்: 104 km (65 mi) பட்டர்வொர்த்–பாடாங் பெசார்: 169.8 km (105.5 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | 25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | 120 km/h (75 mph) | ||
|
கேடிஎம் கொமுட்டர் சேவை பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. இதுவே மலேசிய தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்பட்ட முதலாவது மின்சாரத் தொடருந்து சேவையாகும். இதற்குப் பின்னர்தான் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS); ஆகிய இரு சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தன.[1]
2014 டிசம்பர் மாதம் ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டம் நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து 2015 செப்டம்பர் 11-ஆம் தேதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சேவை பின்னர் ஈப்போ தொடருந்து நிலையத்தில் இருந்து பாடாங் பெசார் வரை கேடிஎம் இடிஎஸ் சேவை என நீட்டிக்கப்பட்டது.[2]
தற்போது, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் வடக்கு பகுதியில் இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது; அதாவது பட்டர்வொர்த்–பாடாங் பெசார் வழித்தடம்; மற்றும் பட்டர்வொர்த்–பாடாங் ரெங்காஸ் வழித்தடம்.[3][4][5]
அத்துடன் கேடிஎம் இடிஎஸ் சேவையின் மற்ற வழித்தடங்களையும் கேடிஎம் கொமுட்டர்பகிர்ந்து கொள்கின்றது. கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப்படாத நிலையங்களுக்கு கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் செல்கின்றன.
கேடிஎம் கொமுட்டர் வடக்குப் பிரிவு இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது:[6]
நிலையம் | நடைபாதை | 2 நிறுத்தம் |
1 நிறுத்தம் |
குறிப்புகள் |
பாடாங் பெசார் | 2 தீவு நடைபாதைகள் | ● | வடக்குப் பகுதியின் இறுதி நிலையம் | |
பிக்கிட் கெத்ரி | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
ஆராவ் | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
கொடியாங் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
அனாக் புக்கிட் | 2 பக்க நடைபாதைகள் | ● | 5 முதல் 8 நிமிடங்களில் சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம் | |
அலோர் ஸ்டார் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
கோபா | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
குரூண் | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
சுங்கை பட்டாணி | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
தாசேக் குளுகோர் | 1 தீவு நடைபாதை 1 பக்க நடைபாதை | ● | ||
புக்கிட் மெர்தாஜாம் | 2 தீவு நடைபாதைகள் | ● | இடமாற்று நிலையம் | |
புக்கிட் தெங்கா | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
பட்டர்வொர்த் | 2 தீவு நடைபாதைகள் | ● | ● | ஜார்ஜ் டவுன் நகருக்கு ரேபிட் பெரி மூலம் அணுகல்; இடமாற்றம். |
புக்கிட் தெங்கா | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
புக்கிட் மெர்தாஜாம் | 2 தீவு நடைபாதைகள் | ● | இடமாற்று நிலையம் | |
சிம்பாங் அம்பாட் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
நிபோங் திபால் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
பாரிட் புந்தார் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
பாகன் செராய் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
கமுந்திங் | 2 தீவு நடைபாதைகள் | ● | ||
தைப்பிங் | 2 பக்க நடைபாதைகள் | ● | ||
பாடாங் ரெங்காஸ் | 2 தீவு நடைபாதைகள் | ● | நீல வழித்தடத்தின் தெற்கு முனைய நிறுத்தம் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.