பாரிட் புந்தார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பாரிட் புந்தார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Parit Buntar Railway Station மலாய்: Stesen Keretapi Parit Buntar); சீனம்: 巴力文打火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கிரியான் மாவட்டம், பாரிட் புந்தார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாரிட் புந்தார் நகரத்திற்கும்; மற்றும் கிரியான் மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]
பாரிட் புந்தார் Parit Buntar | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பாரிட் புந்தார் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | பாரிட் புந்தார், பேராக் | ||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.120556°N 100.490556°E | ||||||||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரில் இந்த நிலையம் உள்ளது.[2]
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், பாரிட் புந்தார் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது. [3]
பாரிட் புந்தார் (Parit Buntar) பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது. இங்கு பெருமளவில் பெரிய நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் வெள்ளப் பகுதிகளை மீட்டு எடுப்பதற்கும்; நெல் வயல்களின் உள்ளேயும் வெளியேயும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப் படுத்தவும்; பெரிய அளவிலான நீர்ப்பாசன முறை நடைமுறையில் உள்ளது.
பாரிட் புந்தார் நகரத்தின் அடையாளச் சின்னமாக ஒரு மணிக்கூண்டு விளங்குகின்றது. இதைப் பெரிய மணி (Big Clock) என்று பாரிட் புந்தார் தமிழர்கள் அழைக்கிறார்கள்.
1961 ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி, பாரிட் புந்தார் மக்களின் வளப்பத்தையும் வளர்ச்சியையும் நினைவு கூரும் வகையில் இந்த மணிக்கூண்டு திறப்புவிழா நடைபெற்றது. மலேசியத் தந்தை துங்கு அப்துல் ரகுமான் அவர்கள் திறப்புவிழா செய்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.