![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/Google_Pay_Logo.svg/langta-640px-Google_Pay_Logo.svg.png&w=640&q=50)
கூகுள் பே
பணம் கொடுக்க / From Wikipedia, the free encyclopedia
கூகுள் பே (Google Pay) என்பது கூகுள் நிறுவனம் உருவாக்கிய ஒரு எண்ணிமப் பணப்பை ஆகும். செல்லிடத் தொலைபேசி, ஆண்ட்ராய்டு, கைக் கணினி போன்ற கருவிகளின் வலைத்தளம் வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் இது பயன்படுகிறது. சனவரி 8,2018 இல் கூகுள் நிறுவனம் அதனுடைய பழைய பணம் செலுத்தும் முறைகளான ஆண்ட்ராய் பே மற்றும் கூகுள் வாலட் போன்றவற்றை ஒருங்கிணைத்து கூகுள் பே என அறிவித்தது.[1] ஆண்ட்ராய்டு பே என்பது கூகுள் பே என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது கூகிள் குரோமினுடைய தானாகவே நிரப்பிக் கொள்லும் வசதியையும் கொண்டுள்ளது.[2]இந்தச் செயலியில் ஆண்ட்ராய்டு பே மற்றும் கூகுள் வாலட் போன்ற செயலிகளிலிருந்து பணம் செலுத்தும் மற்றும் பணம் பெறுவதற்கு வேண்டுதல் அனுப்புதல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளது.[3][4]
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
![]() | |
உருவாக்குனர் | கூகுள் |
---|---|
தொடக்க வெளியீடு | செப்டம்பர் 11, 2015 (2015-09-11) (ஆண்ட்ராய்டு பே) அக்டோபர் 23, 2017 (2017-10-23) (கூகுள் பே) |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மற்றும் அதற்கு மேல் |
மென்பொருள் வகைமை | இணையம் வழி பணம் செலுத்த உதவும் செயலி |
உரிமம் | தனியுரிமை மென்பொருள் |
இணையத்தளம் | pay.google.com |
மூடு