From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த் (ஆங்கில மொழி: Christopher Hemsworth)[1] (பிறப்பு: 11 ஆகத்து 1983)[2] என்பவர் ஆத்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹாலிவுட்டில் ஒரு திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற ஆத்திரேலிய நாட்டு தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முக்கியத்துவம் பெற்றார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் தோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும் மற்றும் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ஆனார்.[3][4]
கிறிஸ் ஹெம்ச்வோர்த் | |
---|---|
பிறப்பு | கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த் 11 ஆகத்து 1983 மெல்பேர்ண், விக்டோரியா, ஆத்திரேலியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | எல்சா படாகி (2010) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) லூக் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) |
இவர் ஸ்டார் ட்ரெக் (2009), இசுநொவ் வைட் தி அண்ட் தி ஹன்ட்ச்மேன் (2012), ரஷ் (2013), பிளக்கட் (2015) போன்ற பல திரைப்படங்களிலும், 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர், தி அவேஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), தோர்: ரக்னராக் (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற படங்களில் தோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த் ஆகத்து 11, 1983 ஆம் ஆண்டு மெல்பேர்னில் பிறந்தார். இவரின் தாயார் ஒரு ஆங்கில பாட ஆசிரியை மற்றும் தந்தை ஒரு சமூக சேவை ஆலோசகர் ஆவார்.[5][6] இவர் ஹீத்மாண்ட் என்ற கல்லூரியில் உயர்நிலை படிப்பை படித்தார். இவருக்கு லியம் ஹெம்ஸ்வர்த் மூத்தசகோதரும் மற்றும் லூக் ஹெம்ஸ்வர்த் என்ற இளையசகோதரும் உண்டு. இவர்களும் நடிகர்களாக உள்ளனர்.
இவர் 2002 ஆம் ஆண்டு முதல் சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்ஃபெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் 2011 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் மீநாயகன் தோர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்கு இவர் முதலில் லோகி என்ற கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யபப்ட்டர்,[7][8] பின்னர் இவரின் உடல் அமைப்பு காரணமாக லோகி கதாபாத்திரத்தில் இருந்து தோர் வேடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இந்த படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று உலகளவில் 449.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து,[9] 2011 இல் 15வது அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் ஆனது.[10] அதை தொடர்ந்து தி அவேஞ்சர்ஸ் (2012),[11] தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[12] தோர்: ரக்னராக் (2017),[13] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022)[14] போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இசுபானிய நடிகை மற்றும் வடிவழகியான எல்சா படாகி என்பவர் காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு இந்தியா ரோஸ் என பெயர்சூட்டப்பட்டது. மார்ச் 2014 இல் டிரிசுதான் மற்றும் சாஷா என்ற இரட்டை மகன்கள் பிறந்தது.
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2009 | ஸ்டார் ட்ரெக் | |
2009 | எ பர்ஃபெக்ட் கெட்டவே காலே | |
2010 | காஷ் | |
2011 | தோர் | தோர் |
2012 | தி காபின் இன் தி வூட்ஸ் | |
2012 | தி அவேஞ்சர்ஸ் | தோர் |
2012 | ஸ்நொவ் வைட் தி அண்ட் தி ஹன்ட்ச்மேன் | ஹன்ட்ச்மேன் |
2012 | ரெட் டோவ்ன் | |
2013 | ரஷ் | |
2013 | தோர்: த டார்க் வேர்ல்டு | தோர் |
2015 | அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் | தோர் |
2015 | சைபர் | |
2016 | தி ஹன்ட்ச்மேன்: பனிப்போர் | ஹன்ட்ச்மேன் |
2016 | கோஸ்ட்பஸ்டர்ஸ் | கெவின் பெக்மன் |
2016 | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் | |
2017 | தோர்: ரக்னராக் | தோர் |
2018 | அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் | தோர் |
2018 | குதிரை வீரர்கள் | கேப்டன் மிட்ச் நெல்சன் |
2019 | அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் | தோர் |
2019 | மேன் இன் ப்ளாக் | |
2019 | தாக்கா |
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | கினிவேரா ஜோன்ஸ் | கிங் ஆர்தர் | 2 அத்தியாயங்கள் |
2002 | நெய்பர்ஸ் | ஜேமி கேன் | 1 அத்தியாயம் |
2002 | மார்ஷல் லா | தி கிட் | 1 அத்தியாயம்: "டொமெஸ்டிக் பிலிஸ் " |
2003 | தி சாட்டலே கிளப் | தி நியூ வேட் | 1 அத்தியாயம்: "டெண்டேர்பூட் " |
2004 | பெர்கஸ் மெக்பைல் | கிரேக் | 1 அத்தியாயம் |
2004–2007 | ஹோம் அன்ட் அவே | கிம் ஹைட் | 185 அத்தியாயங்கள் |
2006 | டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் 5 | அவராக | 5 வது இடம் |
ஆண்டு | தலைப்பு | குரல் |
---|---|---|
2011 | தோர்: கோட் ஒப் துண்டேர் | தோர் |
ஆண்டு | விருது | பரிந்துரை வேலை | முடிவு |
---|---|---|---|
2011 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட பிரேக்அவுட் ஆண் | தோர் | பரிந்துரை |
2012 | பப்தா ரைசிங் ஸ்டார் விருது | தோர் | பரிந்துரை |
2012 | 38வது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் | தோர் | பரிந்துரை |
2012 | எம்டிவி சிறந்த திரைப்பட ஹீரோ விருது | தோர் | பரிந்துரை |
2012 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2012 | 2012 டீன் சாய்ஸ் விருது கோடைக்கால திரைப்பட நட்சத்திரம்: ஆண் | தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் | வெற்றி |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ திரைப்படம் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த திரையில் தோன்றும் கெமிஸ்ட்ரி நடிகர்கள் | ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் பகிரப்பட்டது கிறிஸ்டன் ஸ்டீவர்ட் | பரிந்துரை |
2013 | 39வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது மக்களுக்கு பிடித்த அதிரடி திரைப்பட நடிகர் | தி அவேஞ்சர்ஸ் & ஸ்னோ ஒயிட் மற்றும் ஹன்ட்ஸ்மேன் | வெற்றி |
2013 | 2013 கிட் 'ஸ் சாய்ஸ் விருது பிடித்த ஆண் நடிகர் | தி அவேஞ்சர்ஸ் | பரிந்துரை |
2013 | எம்டிவி திரைப்பட விருது சிறந்த சண்டை | தி அவேஞ்சர்ஸ் | வெற்றி |
2013 | டீன் சாய்ஸ் விருது அதிரடி நடிகர் | ரெட் டேவன் | பரிந்துரை |
2014 | டீன் சாய்ஸ் விருதுகள் சாய்ஸ் திரைப்பட நடிகர் | தோர்: த டார்க் வேர்ல்டு | பரிந்துரை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.